சாதனைகளை படைத்த பிரதமர் வாஜ்பாய்..!

சாதனைகளை படைத்த பிரதமர் வாஜ்பாய்..!
X

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி 

இந்தியாவில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் இறந்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஆட்சிக்கால சாதனைகளை பார்க்கலாம். தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின் தான்... தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது இவர் ஆட்சியில் தான் நாலரை ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை.

இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிறவில்லை அப்போது விலை petrol 36/- ரூபாய் ஒரு லிட்டருக்கு.

இவர் ஆட்சியில் தான் செல்வந்தர்கள் மட்டுமே பல ஆயிரம் செலவழித்து 6 மாதம் காத்திருந்த பெற்ற தொலைபேசி இணைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்.

இந்தியா முழுவதும் விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது. சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது. பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கிடைத்தது.

இவர் ஆட்சியில்தான் வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள். வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்.

விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர் இவர் ஆட்சியில்தான் கேஸ் அடுப்பு வாங்கி உபயோகித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..

இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது. இவர் ஆட்சியில் தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ்சாலைகள் கிடைத்தன.

அதில் தமிழகத்தில் NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி, NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை, NH 208 மதுரை to கொல்லம், NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம், NH 206 ...NH 67 திருச்சி to ராமேஸ்வரம், NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல் மற்றும் NH 45B ஆகியவை அமைக்கப்பட்டன.

இவர் ஆட்சியின் போது தான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது. இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது.

இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியானார். இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றி வாகை சூடப்பட்டது. இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமானது.

இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக அதிகரித்தது. நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது.

இவர் ஆட்சியில் தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது. இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இவர் ஆட்சியில் தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்.. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது.

இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது.

இவர் ஆட்சியில் தான் வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது. இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது. இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது. நாட்டு மக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாய் செய்த பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.

Tags

Next Story