ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் ஓவியங்கள்..! நீங்களும் வரையலாம்..!
Abdul Kalam Drawing Picture
Abdul Kalam Drawing Picture-ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதே சுருக்கமாக ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று அழைக்கப்படுகிறார். அவர் 15ம் தேதி அக்டோபர் மாதம் 1931ம் ஆண்டு பிறந்தார். அவர் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி மறைந்தார். பொதுவாக எல்லோராலும் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். இவர் இந்தியாவின், 11 வது குடியரசு தலைவராக சிறப்பாக பணியாற்றினார். இந்திய நாட்டின் சிறந்த அறிவியலாளர். ஐஎஸ்ஆர்ஓ -ல் விண்வெளி பொறியாளராக பணிபுரிந்தவர்.
இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
1974 ம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்பதால் மாணவர்கள் மீது அல்லது நம்பிக்கை கொண்டிருந்தார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பிடித்த ஒரு தலைவராக விளங்கினார். மொத்தத்தில் நாடே கொண்டாடும் ஒரு ஒப்பற்ற தலைவராக இருந்தார்.
எமது தளத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயா அப்துல் கலாமின் படங்களை வரைந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu