அருணாச்சல பிரதேசத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி..! தேர்தலில் போட்டியிட திட்டம்..!

அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்ப சில வியூகத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. அங்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 3வது மற்றும் 4வது அருணாச்சல பிரதேச ஆயுத போலீஸ் பட்டாலியன்களை உருவாக்கவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில பிரிவு பொதுச் செயலாளர் டோகோ நிகம் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"2024ல் வடகிழக்கு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச குடிநீர், மின்சாரம், ரூ. 10 லட்சம் வரையிலான மருத்துவ வசதி, உலகத் தரம் வாய்ந்த கல்வி போன்றவைகளை அளிப்பதற்கு கட்சி உறுதிபூண்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய அருணாச்சல பிரதேச சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (APUAPA) 2014 மற்றும் அருணாச்சல பிரதேச மத சுதந்திர சட்டம் 1978 ஆகியவற்றை ரத்து செய்யும்" எனவும் நிகம் கூறினார்.
இந்த ஆண்டு மாநில தலைநகரில் 72 மணி நேர பந்த் அழைப்புக்கு விடுத்ததால் மாநில அரசு 40 பேரை APUAPA இன் கீழ் பதிவு செய்ததை அடுத்து வடகிழக்கு மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு 2014 இல் இயற்றிய சட்டத்தை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
1978ம் ஆண்டின் அருணாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின்படி, எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, ஒரு மதத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரையும் பலாத்காரம் அல்லது தூண்டுதல் அல்லது மோசடியான வழிகளில் அல்லது எந்தவொரு நபரும் தூண்டுதலால் மாற்றவோ அல்லது சுயமாக மாற்றவோ முயற்சிக்கக்கூடாது. அத்தகைய மாற்றம் தண்டனைக்குரியது.
அருணாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணைய செயல்;பாடுகளின் (ஏபிபிஎஸ்சி) தோல்வியை ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பதுடன், அருணாச்சலப் பிரதேச மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தில் நிலவும் ஊழல் நடைமுறைகளை முற்றிலும் ஒழிக்கும்" என்றும் நிகம் கூறினார்.
"ஏபிபிஎஸ்சி தாள் கசிவு வழக்கில் முக்கிய பங்காற்றிய கியாமர் பதாங்கின் நினைவாக ஆம் ஆத்மி ஒரு 'நேர்மையின் சிலை' அமைக்கும்," என்றும் அவர் கூறினார்.
ஏபிபிஎஸ்சி நடத்திய உதவிப் பொறியாளர் (சிவில்) பணிக்கான எழுத்துத் தேர்வின் விண்ணப்பதாரர் கியாமர் படுங், இட்டாநகர் காவல் நிலையத்தில் தேர்வுக்கான தாள்கள் கசிந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்தபோது, தாள் கசிவு வெளிச்சத்துக்கு வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் 400-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். APPSC தாள் கசிவு வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
தலைநகர் பிராந்தியத்தில் உலகத் தரம் வாய்ந்த நகரச் சாலை அமைப்பது, பல்வேறு துறைகளில் முறையற்ற பதவி உயர்வுகளுக்கு தடையை அமல்படுத்துவது மற்றும் மாவட்டத் தலைமையகங்களுக்கு அனைத்து வானிலை சாலை இணைப்பை உறுதி செய்வதும் கட்சியின் முன்னுரிமைகளில் அடங்கும்" என்றும் நிகம் கூறினார்.
மாநிலத்தில் முழுமையாக செயல்படும் லோக்ஆயுக்தாவை நிறுவுதல், டோமோ ரிபா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அண்ட் மெடிக்கல் சயின்ஸில் (டிஆர்ஐஎச்எம்எஸ்) உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை வழங்குதல், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் ஏஎல்சி (துணைத் தொழிலாளர் கார்ப்ஸ்) ஆகியோரை முறைப்படுத்துதல் ஆகியவற்றையும் AAP நோக்கமாகக் கொண்டுள்ளது.
12 முதல் 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 'காவ்ன் புராக்'களுக்கான ஊதியத்தை அதிகரிக்கவும் மற்றும் அஸ்ஸாம் எல்லைப்புற (நீதி நிர்வாகம்) ஒழுங்குமுறை, 1945 இன் படி கிராம சபை நீதிமன்றங்களைக் கட்டவும் உறுதி பூண்டுள்ளது.
வாக்குறுதிகளுடன் தொடர்புடைய நிதிச்சுமை குறித்து கேட்டபோது, மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் மாநில வரியின் பங்கை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கான கொள்கைகளை கட்சி உருவாக்கும் என்று நிகம் பதில் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu