ஆதார் கார்டு முதல் கல்வி சான்றிதழ் வரை இனி உங்கள் வாட்ஸ் அப்-பிலேயே பெறலாம்

ஆதார் கார்டு முதல் கல்வி சான்றிதழ் வரை இனி உங்கள் வாட்ஸ் அப்-பிலேயே பெறலாம்
X

பைல் படம்.

DigiLocker இல் உள்ள தரவுகளை வாட்ஸ் ஆப் மூலம் நொடிகளில் பெற்றுவிடலாம். ஒரு முறை பதிவு செய்தால் போதும்.

ஜூலை 1, 2015 டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு பல டிஜிட்டல் மயமாக்கப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தாலும் ஒரு சில தான் நம் மக்களுக்கு தெரிகிறது. தினமும் பயன்படுத்துகிறார்கள். ஒரு சில எளிய வசதிகள் இருப்பதே நமக்கு தெரிவதில்லை. அதில் ஒன்று தான் டிஜிலாக்கர் (DigiLocker) வசதி.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) முதன்மை முயற்சியாக DigiLocker என்பது கொண்டு வரப்பட்டது. போகும் எல்லா இடங்களுக்கு ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு போகாமல் DigiLocker இல் சான்றிதழ்களை வைத்துக்கொண்டால் போதும். அதை காண்பித்துக் கொள்ளாலாம். இது எல்லா அரசு அலுவலகங்களிலும் செல்லுபடி ஆகும் என்று அறிவித்தனர்.


ஆனால் அதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது. போன வருடம் DigiLocker பயன்பாட்டை மேலும் எளிதாக்க வாட்ஸ் ஆப் சாட் பாக்ஸ்(chat box) வசதியையும் அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் DigiLocker இல் உள்ள தரவுகளை வாட்ஸ் ஆப் மூலம் நொடிகளில் பெற்றுவிடலாம். ஒரு முறை பதிவு செய்தால் போதும். அதன் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

அதற்கு முன்னால் நீங்கள் DigiLocker இல் பதிவு செய்ய வேண்டும் https://www.digilocker.gov.in/என்ற இணையதளத்தில் எளிதாக உங்கள் கணக்கை தொடங்கலாம். உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், தொலைபேசி எண், மெயில் ஐடி, உங்கள் விருப்ப ஆறு இலக்க பின் போட்டால் போதும். உங்கள் DigiLocker கணக்கு தயார்.

பான் கார்டு

ஆதார் கார்டு

ஓட்டுனர் உரிமம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்

வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC)

இரு சக்கர வாகன காப்பீட்டுக் கொள்கை ஆவணம்

உங்களது காப்பீட்டுக் கொள்கை ஆவணம் என்று அனைத்தையும் DigiLockerஇல் சேமித்து வைத்துக்கொள்ளலாம்

வாட்ஸ் ஆப்பில் பெறுவது எப்படி?

முதலில் உங்கள் தொலைபேசியில் +91 9013151515 என்ற எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . இது தான் DigiLocker வாட்ஸ் ஆப் சேவை எண். பின்னர் வாட்ஸ் ஆப்பில் DigiLocker உதவி சாட் பாக்ஸிற்கு 'hi' என்று செய்தி அனுப்புங்கள். அப்போது உங்களை வரவேற்கும் ஒரு செய்தியோடு சேவைக்கான தேர்வுகளையும் கேட்கும்.

அதில் DigiLocker service என்பதை தேர்வு செய்தால் ஏற்கனவே 'DigiLocker கணக்கு வைத்திருக்கிருக்கிறீர்களா?' என்று கேட்கும். ஆம் என்பதை தேர்வு செய்ததும், 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்யச் சொல்லும். பதிவு செய்ததும் ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்டால் உங்கள் DigiLockerக்கான வாட்ஸ் ஆப் சேவை தொடங்கிவிடும்.


அதன் பின்னர் DigiLockerஇல் நீங்கள் வைத்துள்ள அனைத்து டாக்குமென்டுகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் வேண்டியதை குறிப்பிட்டால், நொடிகளில் pdf பைலாக உங்கள் வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பப்படும். அதை பதிவிறக்கம் செய்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒருமுறை ஆதார் எண் பதிவிட்டு பதிவு செய்துகொண்டால் போதும் அடுத்து தேவைப்படும் போது எல்லாம் 'hi' என்று அனுப்பினால் உங்கள் தரவுகளின் பட்டியல் கிடைத்துவிடும் . இது ரொம்ப ஈஸி தானே? இனி எல்லா ஆவணங்களையும் நொடிகளில் எடுத்து காட்டிவிடலாம் தானே.........

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!