உருவானது வலிமையான பாரதம்: அடிபட்டு தவிக்கிறது கனடா

உருவானது வலிமையான பாரதம்:   அடிபட்டு தவிக்கிறது கனடா
X

பைல் படம்

வலிமையான பாரதம் உருவாகி விட்டதன் அறிகுறி கனடா விவகாரத்தில் தெரிகின்றது.

இந்திய வரலாற்றிலே முதல் முறையாக அதாவது ஆப்கானிய பிரிட்டிஷ் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவிலும் மேலை நாடு ஒன்றுக்கு தைரியமாக தடை விதிக்கும் முதல் சம்பவத்தை தேசம் செய்துள்ளது. கனடியர்களுக்கு விசா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என்பது தேசம் ஒரு வல்லரசு நிலையில் கனடா எனும் மேற்கத்திய நாட்டுக்கு சவால் விட்டுள்ள விஷயம் ஆகும்.

இங்கே நிலைமை யாருக்கு சாதகம் என்றால், சந்தேகம் இல்லாமல் இந்தியாவுக்குத் தான். வெறும் 3 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு கனடா. பெரும் விஞ்ஞான ஏற்றுமதியோ இல்லை உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் கருவிகளோ அந்த நாடு செய்வதில்லை. பெட்ரோலும் எரிவாயு வியாபாரமும் அவர்கள் நாடித்துடிப்பு. ஆனால் அவை இந்தியாவுக்கு அவசியமில்லை.

கனடா எதையும் தனியே செய்யும் சக்திகொண்ட நாடு அல்ல, அது அமெரிக்கா அல்லது ஐரோப்பிய யூனியனை சார்ந்திருக்கும் நாடு. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இந்தியா அவசியம். இந்தியாவின் உறவு அவசியம். இன்னொன்று கனடாவினை இந்தியா சும்மா பகைக்கவில்லை. சுமார் 43 தீவிரவாதிகள் அடங்கிய பட்டியலை அதாவது கனடாவில் பதுங்கியிருக்கும் இந்திய துவேஷிகள் பட்டியலை கொடுத்தது. ஆனால் கனடா கண்டுகொள்ளவில்லை. பதிலுக்கு இந்தியா களத்தில் இறங்கி தூக்க ஆரம்பித்து விட்டது.

இதனை உலக அரங்கில் கனடா பெரிதாக்க முடியாது. தீவிரவாத தடைசட்டத்தில் கையெழுத்திட்டிருக்கும் நாடு அது. இந்தியா நிலமையினை இன்னும் கடுமையாக்கினால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு கனடா எனும் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்.

இதனால் உலக நிலைமை தனக்கு சாத்கமாக இருக்கும் நிலையில் அடித்து ஆடுகின்றது இந்தியா. கனடாவில் இருக்கும் ட்ரூடோ அரசு அந்நாட்டின் சிறுபான்மை மக்கள் ஆதரவில் இயங்கும் அரசு. இதனால் அங்கு ஆட்சி அமைக்க அங்கிருக்கும் அயல்நாட்டவர் ஆதரவு அவசியம். குறிப்பாக சீக்கியர் ஆதரவு அவசியம்.

இதனால் இந்தியாவின் ஒவ்வொரு மிரட்டலும், நடவடிக்கையுமம் கனடாவுக்கு சிக்கலை அதிகரிக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் கனடா பின்வாங்கும். இதனை தவிர வேறு வழியில்லை. சில ஆயிரம் சீக்கியருக்காக மொத்த கனடிய நலனையும் அது பலிகொடுக்க முடியாது. கனடாவில் காலநிலை மோசம், பெரும் தொழில் வாய்ப்புமில்லை, பெட்ரோல் பணமே ஆதாரம். இதனால் குடியுரிமை தளர்வுகளை அள்ளி வீசும் நாடு. இதனாலே சீக்கியர் உள்ளிட்ட குடியேறிகளின் எண்ணிக்கை அங்கு அதிகம். ஆனால் அதற்காக அவர்கள் இந்தியாவினை பகைக்க முடியாது. இன்று சீக்கியர்களுக்காக இந்தியாவினை பகைத்தால் நாளை இலங்கையினை ஈழ தமிழருக்காய் பகைக்க வேண்டும். சீனாவினை சீன குடியேறிகளுக்காக பகைக்க வேண்டும். உலகையே பகைக்க வேண்டும்

குடியேறிகளால் உருவாக்கபடும் நாட்டுக்கு இது பெரும் சிக்கல். இப்படி பலவீனமான ஆனால் மேலை நாடு, எங்கள் மேல்கைவைக்க யாராலும் முடியாது என ஒரு மிதப்பில் இருந்தது. இப்போது கனடாவுக்கு பெரும் அடி கொடுத்திருக்கின்றது இந்தியா.

இனி கனடிய அரசே இந்த சீக்கிய கும்பலை அடக்கி வைக்கும் இல்லை. அங்கிருக்கும் நல்ல சீக்கியர்கள் அடக்குவார்கள். சீக்கிய தீவிரவாதிகளை அடக்க இது மிக சரியான நேரம். சுமார் 40 ஆண்டுகளாக தேசத்தை அயல்மண்ணில் இருந்து மிரட்டிகொண்டிருந்த கூட்டம் இப்போது தான் முதல் சவாலை சந்திக்கின்றது.

ஒவ்வொரு நாட்டிலும் உளவுப்படை தான் நாட்டை இயக்கும் முக்கியமான அமைப்பு. உளவுப்படை இல்லாத அரசனும் நாடும் பலமிழந்து போகும் என எச்சரித்தான் சாணக்கியன். எதெல்லாம் சாத்தியமான விஷயமோ அவ்வளவு விஷயங்களுக்குள்ளும் புகுந்து எதிரிகள் நடமாட்டத்தை உளவுபார்ப்பதே ராஜதர்மம் என்றான் சாணக்கியன்.

வள்ளுவன் ஒரு அதிகாரமே "ஒற்றறிதல்" என எழுதினான். "ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்தது இல்"

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லைய

"வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று"

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.

"துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று"

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன் என உளவுபடையின் அவசியங்களை சொன்னான் வள்ளுவன்

இந்திய உளவுதுறை புதிய பெரும் மாற்றத்தை செய்திருப்பதை அவதானிக்க முடிகின்றது, உளவு விவகாரங்களில் பரிட்சயம் இருந்தால் இது புரியும். அதாவது இந்திய உளவுத்துறை ரா- இந்திரா காலத்தில் உருவானது, அப்போது அதற்கு உளவுபார்ப்பதுதான் பணியே தவிர யாரையும் கொல்ல அதிகாரமில்லை. இந்த கொள்கைக்தான் மன்மோகன் சிங் காலம் வரை இருந்தது.

வெளிநாட்டில் உளவுபார்ப்பார்கள், தேச விரோதிகளை அருகிருந்து பார்ப்பார்கள். அத்தோடு சம்பந்தபட்டவன் அங்கு வசிக்கின்றான் என சொல்லிவிட்டு அவரவர்போக்கில் இருப்பார்கள். இதுதான் நடந்தது, சம்பந்தபட்ட குற்றவாளிமேல் நடவடிக்கை எடுக்க இந்திய சட்டத்தில் இடமில்லை, அதிகாரமில்லை. மோடி ஆட்சியில் அது மாற்றபட்டது. குற்ற்வாளி வெளிநாட்டில் பதுங்கினால் அவனை கண்டு அடையாளப்படுத்துவது அவனுக்கு புது உடை வாங்கிதரவோ அவன் உடல் மெலிந்துவிட்டான் என கவலைப்படவோ அல்ல. கண்ட இடத்தில் தூக்க வேண்டும் என முடிவு எடுக்கபட்டது.

இந்த முடிவுக்கு பின்னர்தான் பாகிஸ்தானில் தூக்கினார்கள். ஆப்ரிக்காவில் தூக்கினார்கள். ஐரோப்பாவில் பல இடங்களில் தூக்கினார்கள். எந்த நாடும் வெளி சொல்ல முடியா சிக்கல் இது, திருடனுக்கு தேள்கொட்டியதை போல் அழுதபடி பொறுத்துக் கொண்டார்கள். கனடிய பிரதமர் மட்டும் சத்தம் போட்டு தேடப்படும் சிங்குகள் எங்கள் நாட்டில் இல்லை என சொல்லி மாட்டிகொண்டார்.

ஆக இனி என்னாகும்?

இது கனடாவுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, லண்டன் பாரீஸ் என பல இடங்களில் பதுங்கியுள்ள எல்லா தேசவிரோதிகளையும் பார்த்து ஒருமாதிரி புன்னகைக்கின்றது தேசம்...நன்றி: ஸ்டான்லி ராஜன்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil