இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
ஜோ பைடன், டிரம்ப்
இப்போது அமெரிக்க தேர்தலுக்கும், இந்தியாவின் ஸ்டைலுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா. செய்தியை கட்டாயம் படிங்க புரியும்.
உலக வரலாற்றில் இதுவரை இல்லாத சமாச்சாரமாக வரும் ஜூன் 27 ஆம் தேதி ஜோபைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றனர். அன்று மட்டும் இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு நேருக்கு நேர் ஒரு பிரத்யேக விவாத அரங்கில் பேச இருக்கிறார்கள்.
ஏற்கனவே இதுபோல் 2020 ஆம் ஆண்டிலும் பேசியிருக்கிறார்களே என்றால்..... அது வேறு, இது வேறு. அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு. அப்போது அந்த அரங்கில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர் என அமெரிக்கர்களே பேசிக்கொள்கின்றனர்.
ஆனால் இம்முறை அதுபோல் இல்லாமல் பார்வையாளர்கள் எவரும் பங்கேற்காமல் இருவர் மட்டுமே ஓர் விவாத அரங்கில் பேசுகின்றனர். மைக்ரோபோன், செல்போன் போன்ற எந்த ஒரு சாதனங்களும் இல்லாமல் குறிப்புகள் எழுத பேனா பேப்பர் சகிதம் பேசவிருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் இரண்டு முறை விளம்பர இடைவெளி உண்டு எனவும், அந்த இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிக்க அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்கள். நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் வெகு சுலபமாக பைடனை இதில் ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என பல அமெரிக்கர்கள் இப்போதே ஆரூடம் கூறிவருகின்றனர். அவரது உடல் மொழி அத்தகையது என்பதால் தற்போது இதனை அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அந்த நிகழ்ச்சியின் விளம்பர இடைவேளை அதிக தொகைக்கு ஏலம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.
இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இது அவர்களுக்கு மிக மிக முக்கியமான தேர்தலாக மாறி நிற்கிறது. காரணம் உலக அரசியல்.
இவ்வாண்டு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளர்கள் பெருமளவில் தோற்று முன்னெப்போதும் இல்லாத வகையில் நம் இந்திய தேசம் போல் புதிய வளர்ச்சி சிந்தனை கொண்ட அமைப்புக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இன்னமும் சரியாக கூறுவதென்றால் ஏமாற்றி தின்று வந்தவர்கள் உலகம் முழுவதும் மண்ணை கவ்வியிருக்கிறார்கள்.
அதிபர் தேர்தலிலும் இது தான் நடக்கப்போகிறது. அமெரிக்காவை பொருத்தவரையில் டொனால்ட் ட்ரம்ப் வளர்ச்சி, ஒற்றுமை, அமைதி என்ற முற்போக்கான சிந்தனை கொண்டவர். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு 45 வது ஜனாதிபதியானவர்.
ஆனால் ஜோபைடன் அப்படி அல்ல, தனது 29 வது வயதில் இருந்தே அரசியலில் இருக்கிறார். கிட்டத்தட்ட நம் ஊர் அரசியல்வாதி போல் தான் அவர். அமெரிக்க காங்கிரஸ் தான் பின்னாளில் ஜனநாயக கட்சியாக கழுதை சின்னத்தை கொண்டு இடுகிறார்கள். இதில் கடந்த காலத்தில் படிப்படியாக வளர்ந்து 47 வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஜோபைடன். தற்போது நடக்கும் அமெரிக்க தேர்தல் 47 வது ஜனாதிபதியை தேர்வு செய்ய... இவரே 47வது ஜனாதிபதியாக போகிறார் என்றெல்லாம் இப்போதே அவரது ஆதரவாளர்கள் கச்சை கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர்.
இங்கு மற்றோர் விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அமெரிக்க அதிபர்களிலேயே ஒற்றை இலக்க செல்வாக்கு கொண்ட ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கக்கூடும். இவரது வயது மூப்பு ஒரு தடையாக இருக்கிறது. தவிர இவரது மகனை குற்றவாளி என்று தீர்ப்பளித்து 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறார்.
வெள்ளை மாளிகை இவரால் சாம்பல் படிந்து விட்டது. அழுக்காகி அலங்கோலமாக நிற்கிறது. ட்ரம்ப் தான் சரியான ஆள், இதனை எல்லாம் சரிசெய்ய அவர் தான் வேண்டும் என்பதாக அமெரிக்க மக்களிடம் கருத்தாக்கம் உருவாகி வருகிறது என்கிறார்கள் அங்குள்ளவர்கள்.
கடந்த தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கால் வெற்றி பெற்ற ஜோபைடன் இம்முறை உலக அளவில் எழுச்சி கண்டு வரும் இந்திய பாணி அரசியலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார்கள். போதாக்குறைக்கு இவரது ஆரம்ப கால ஆட்சியில் நம் இந்திய அரசை பெரும் அளவில் பதம் பார்த்தது தற்போதைய சூழ்நிலையில் இவருக்கு எதிராக திரும்ப கூடும் என்றும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி காலிஸ்தான் இயக்க காலிகளை, பயங்கரவாதிகளை கனடாவுடன் சேர்ந்து தன் நாட்டில் தங்க, பதுங்கி இருக்க, ஆதரவு கொடுப்பது, ஆயுதமேந்திய காவல் படையினரை கொண்டு பாதுகாப்பது என ஏகப்பட்ட விஷயங்கள் செய்திருக்கிறார். இம்முறை இதெல்லாம் அவருக்கு எதிராக திரும்ப இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்கள்.
இது ஒரு புறம் இருக்க பிரஞ்சு அதிபர் மேக்ரோன் தனது நாட்டில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்னதாகவே ஆட்சியை கலைத்து விட்டு இம்மாத இறுதியில் அல்லது அடுத்து மாதம் முதல் வாரத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிறார். எல்லாம் வளர்ச்சி பற்றிய சிந்தனை படுத்தும் பாடு என்கிறார்கள். அதாவது நரேந்திர மோடியின் பாணியில் தனது ஆட்சி முறையை வரும் காலங்களில் ஏற்படுத்தப்போவதாக வெளிப்படையாகவே மேம்ரோன் அறிவித்திருக்கிறார்.
G7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுணக்கிற்கு இதுவே கடைசி. இனி அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆனால் அவரோ இனிவரும் காலங்களில் மோடி பாணியிலான ஆட்சி . அதனால் வாய்ப்பு கொடுங்கள் என்கிறார்.
இங்குள்ளவர்கள் உடனே இதனை நரேந்திர மோடியை பற்றிய பதிவு என்பதாக புரிந்து கொள்ள கூடாது.... அவர்கள் முன்னெடுக்க நினைப்பது நாட்டின் வளர்ச்சி குறித்த சிந்தனை முறையை... அதற்கு மோடியை அடையாளப் படுத்துகிறார்கள்.
உலக நாடுகள் அனைத்தும் போதைக்கு எதிரான நடவடிக்கை, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன், நாட்டின் வலுவான பாதுகாப்பு, வேகமான வளர்ச்சி, தற்போதைய தேவைக்கேற்ற சீர்திருத்தம் என்ற மோடியின் பாணியை கடைபிடிக்கின்றனர்.
வலுவான அமெரிக்க தலைமை இல்லை என்றால் சின்தடிக் ட்ரக் மாஃபியாயை கட்டுப்படுத்தவே முடியாது என்கிற நிலை தான் அங்கு தொடர்கின்றது.
பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் இஃது... உண்டாக்கிய பெருமையும் அமெரிக்கர்களையே சாரும் என்பது தான் கொடுமையான சமாச்சாரம். பல தசாப்தங்களாக பல சாம்ராஜ்யங்களை கவிழ்க்க ஆரம்ப காலங்களில் இவர்களுக்கு கையில் எடுத்த ஒரு வழி முறை தான் இந்த போதை மருந்து புழக்கத்திற்கு அடிகோலியது.
இதனை எதிர்த்து ஓரளவுக்கு வெற்றிகரமாக கையாண்டது டொனால்ட் ட்ரம்ப் மட்டுமே என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். இந்த ட்ரக் மாஃபியாக்கள் சீனாவையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் குறிப்பாக சின்தடிக் ட்ரக்கை அதி நவீன முறையில் உருவாக்க உற்பத்தி செய்ய பெருமளவு முதலீடுகளை மேற்கு உலகம் சீனாவில் கொட்டிக்கொடுத்துள்ளது. இதனால் விரைவில் சீனாவிலும் மாற்றத்தை நோக்கிய பயணம் தொடரலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu