பாகிஸ்தான் சிறையிலிருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை

பாகிஸ்தான் சிறையிலிருந்து 80 இந்திய மீனவர்கள் விடுதலை
X

வாகா எல்லையில் பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்.

பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 80 இந்திய மீனவர்கள் வாகா எல்லையை வந்தடைந்தனர்.

இந்தியாவும் அண்டை நாடான பாகிஸ்தானும் கடல் எல்லையை தாண்டும் மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகின்றனர். ஒரு பக்கம் ஜம்மு காஷ்மீர் எல்லையிலும் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை ஏற்பட்டு வருகிறது. நமது எல்லையில் நுழையும் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றும் வருகிறது.

இதனிடையே பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் கீழ் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பாகிஸ்தான் மாலிர் சிறையில் இருந்து 80 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு கடந்த வியாழக்கிழமை விடுவிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 80 பேரும் அல்லாமா இக்பால் எக்ஸ்பிரஸ் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி வைக்கப்பட்டு, லாகூர் சென்றடைந்து அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படைக்கப்பட்டனர்.

இந்திய மீனவர்கள் லாகூர் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்த எதி நல அறக்கட்டளையின் பைசல் எதி, பெரும்பாலும் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இறுதியாக தாயகம் திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் குடும்பத்தினருக்கு பரிசு மற்றும் ரொக்கத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் விடுவிக்கப்பட்டவர்கள் விரைவில் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்துவிடுவோம் என மகிழ்ச்சியடைகிறார்கள் எனவும் அவர் கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா