இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா, 2,812 பேர் பலி : சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991  பேருக்கு கொரோனா, 2,812 பேர் பலி : சுகாதார அமைச்சகம்
X
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,812 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் நோய் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் முழு உரடங்கை அமல்படுத்தியுள்ளது.

தீவிரமாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரவமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 25ம் «தி காலை 7.30 மணி முதல், 26ம் தேதி காலை 7.30 மணிவரை இந்தியாவில் கொரோனா விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு 1,73,13,163 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோல கொரோனா நோய்க்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று ஒரே நாளில் மட்டும் 2812 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2,19,272 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,43,04,382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியா முழுவதுமு பல்வேறு மருத்துவமனைகளில் 28,13,658 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுவரை 14,19,11,223 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!