கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று
பைல் படம்
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கொரோனா வால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்,128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்று நோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன என்றார்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.J N.1 என்ற புதிய கொரோனா வைரஸ் துணை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்திய அதிகாரிகள் விழிப்புடன் உள்ளனர், விஞ்ஞான சமூகம் இந்த புதிய மாறுபாட்டை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் மொத்தம் 21 பேருக்கு J N.1 மாறுபாடு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன என்று நிதி (NITI) ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.
மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மரபணு சோதனைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதன்படி கோவாவில் 19 பேருக்கும், கேரளா மற்றும் மராட்டிய மாநிலத்தில் தலா ஒருவருக்கும் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளன. J N.1 (BA.2.86.1.1) மாறுபாடு BA.2.86 பரம்பரையின் (பிரோலா) வழித்தோன்றலாகும். BA.2.86 பரம்பரை, ஆகஸ்ட் 2023 இல் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. BA.2.86 ஸ்பைக் (5) புரதத்தில் 30 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, இது நோய் எதிர்ப்பு ஏய்ப்புக்கான உயர் திறனைக் குறிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu