இந்தியாவில் 3 வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்.
கொரோனா வைரஸ் (கோப்பு படம்)
இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3 வது அலை ஏற்படலாம் என மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3 வது அலை ஏற்படலாம்; அப்போது அதிகப்படியானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பாதிப்பு பெரியளவில் இருக்காது' என, மத்திய அரசின் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா, சிக்கிம், உத்தரகண்ட், குஜராத், ஹரியானா, டில்லி, கோவா போன்ற மாநிலங்கள் கொரோனா 2வது அலை ஏற்கனவே உச்சத்தைக் கண்டுள்ளன.
இந்தியாவில் மே மாத இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகக் குறையும்.ஜூன் இறுதியில் இது மேலும் குறைந்து 20 ஆயிரம் கேஸ்களாக இருக்கும்.
தமிழகத்தில் வரும் மே 29 - 31 தேதிகளிலும், புதுச்சேரியில் 19 - 20 தேதிகளிலும் கொரோனா உச்சமடையும்.அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விரைவில் 2வது அலை உச்சத்தைத் தொடும் என மத்திய அரசின் வல்லுநர் குழு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu