திருப்பதி கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்.
திருப்பதி கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்.
திருப்பதி கபலீஸ்வரர் கோயில் வளாகத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்சிசிடிவி கேமராவில் பதிவானது.போலீசார் சிசிடிவி காட்சிகள் வெளியீடு பொதுமக்களுக்கு கோயில் வளாகத்திற்கு செல்லும் போது பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகம் சேஷாசலம் வனப்பகுதி அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு கபாலீ தீர்த்தம் நீர்வீழ்ச்சி உள்ளது.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கபாலீஸ்வரர் தரிசனம் செய்ய வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக கோவில் வளாகத்தில் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வனப்பகுதியை விட்டு இரண்டு சிறுத்தைகள் கோயில் வளாகத்தில் வந்து விளையாடிக்கொண்டிருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு போலீசார், கோயில் வளாகத்தில் செல்லும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu