கொரோனா பாதிப்பு நேரத்தில் மகாராஷ்டிராவில் அரசுப் பணிகளுக்கான தேர்வு !

கொரோனா பாதிப்பு நேரத்தில்  மகாராஷ்டிராவில் அரசுப் பணிகளுக்கான தேர்வு !
X

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனிடையே மகாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாநில அரசு காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக இந்தத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தேர்வர்களின் எதிர்ப்பை அடுத்து, மார்ச் 21 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என தேர்வாணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முகக்கவசங்களை அணியவும் தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மகாராஷ்டிரா முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.

நேற்று மட்டும் ஒரேநாளில் 27,126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா