டெல்லி போராட்டம் - விவசாய அமைப்பு விலகல்
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திலிருந்து விலகுவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஆனால், அந்தப் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்நிலையில் போராட்டத்திலிருந்து விலகுவதாக அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த வி.எம். சிங் கூறும் போது,வேறு ஒரு நோக்கத்துடன் இருப்பவர்களுடன் எங்களால் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே, அவர்களுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்திலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு விலகுகிறது.குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால், இது மாதிரியான போராட்டம் என்னுடன் தொடராது. நாங்கள் உயிர் தியாகம் செய்யவோ அடி வாங்கவோ இங்கு வரவில்லை என்றார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu