குடியரசுதினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

குடியரசுதினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு
X
நாட்டின் 72வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர் டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நாடெங்கும் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜ்பத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில், வீரர்களின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் முதன்முறையாக வெளிநாட்டு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தின விழா முடியும் வரை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!