உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X

உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைகளின் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ததையடுத்து, உத்தரகாண்டில் மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைதுறை கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து மாநிலத்தில் பறவைகள் மற்றும் கோழிகளின் இறப்பு பற்றிய கட்டணமில்லா தொலைபேசி (18001208862) என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து டாக்டர் கே.கே. ஜோஷி கூறும் போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைகாய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர் என்று கூறினார்.

Tags

Next Story