மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தல்

மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்   இந்தியா வலியுறுத்தல்
X

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்யுமாறு இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தி உள்ளது.

இந்திய உயர்மட்ட குழு, இலங்கை உயர்மட்ட குழு கூட்டு பணிக்குழுவின் 4 ஆவது கூட்டம் காணொளிக்காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் தொடர்பான பிரச்சனைகள், ரோந்துப் பணியில் இரு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.இலங்கை கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 40 மீனவர்களையும், அவர்களது 6 படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்யுமாறும், அவர்களை விடுவிக்கும் வரை தேவையான உதவிகளை வழங்கிடுமாறு இலங்கைக்கு இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது .

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!