சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு மத்தியஅரசு உத்தரவு

சர்வதேச விமானங்களுக்கான தடை நீடிப்பு  மத்தியஅரசு உத்தரவு
X

சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதையடுத்து, மத்திய அரசு சார்பில் சர்வதேச சிறப்பு விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,சர்வதேச விமானங்களுக்கான தடை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச சிறப்பு விமானங்கள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளனர்.அது போல் இந்தியா - பிரிட்டன் இடையேயான விமான சேவைக்கு ஜனவரி 7ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!