குளிர் காலத்துல காளான் சாப்பிடுங்க ,உடலுல அவ்வலோ சத்த குடுக்குதாம் இந்த காளான்
winter season mushroom eating benefits tamil
காளான்கள் (Mushrooms) இப்போது நமது சுற்றுவட்டார கடைகளிலேயே எளிமையாக கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. முன்பை விட காய்கறி கடைகளில் காளான்கள் அதிகம் விற்பனையாவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், காளானை சாப்பிட மக்கள் அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் அதன் ருசிக்காக எடுத்துக்கொள்வோர் ஒருபுறம் இருக்க, அதில் இருக்கும் ஊட்டச்சத்தை கணக்கில் எடுத்தும் அதை சாப்பிடுகின்றனர்.
காளானை நீங்கள் வறுத்தோ, அவித்தோ மாசாலாக்களை சேர்த்தும் சாப்பிடலாம், அல்லது எளிமையாக வேகவைத்து சூப்பாக கூட செய்து சாப்பிடலாம். மற்ற காலகட்டங்களை விட இதுபோன்ற குளிர்காலத்தில் காளானை சாப்பிடுவது பெரியளவில் நன்மையை அளிக்கும்.
காளானின் மூலம் குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி?
குளிர்காலத்தில் பலரின் உடல்நிலையும் மோசமாகும் வாய்ப்பு அதிகம். காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதும் அவசியம் ஆகிறது. இதற்கு காளான் உதவுகிறது. மேலும், செரிமானம் அமைப்பு மோசமாகியிருந்தால் அதனை சீர்செய்யவும் காளான் உதவும். எனவே தான் காளானை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
குறைந்த கலோரிகள் கொண்டவை
காளான்கள் குறைந்த கலோரிகள் கொண்டவை. எனவே இதை நீங்கள் பசியாற சாப்பிட்டாலும் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. வயிறு நிறைந்த உணர்வையும் தரும். இதில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கிறது, நார்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. வயிறு நிறைவடைந்தால் தேவையில்லாமல் நொறுக்குத்தீனிகளை கொறிக்கும் பழக்கமும் விட்டுப்போகும்.
இதயத்திற்கு நல்லது
காளான் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். பல வகை காளான்களில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. இது இதயம் ஆரோக்கியமாக (Heart Health) இருப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். மேலும், காளானில் உள்ள நார்ச்சத்து உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம், இதய நோய் வருவதற்கான ஆபத்தும் குறைகிறது.
குழந்தைகளுக்கு அவசியம்
துத்தநாகம் அதிகம் உள்ள காளான்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவரை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமின்றி குழந்தைகள், சிறுவர்களின் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும். எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி காளானை சமைத்துக்கொண்டுங்கள்.
செரிமானத்திற்கு நல்லது
காளானில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால் ஆரோக்கிய செரிமான அமைப்புக்கு (Digestive System) உதவிகரமாக இருக்கும். முக்கியமாக இதில் இருக்கும் கரையாத நார்ச்சத்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராது. அதுமட்டுமின்றி, கரையும் நார்ச்சத்தால் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கும்.
அவசியமான ஊட்டச்சத்துக்கள் | காளான்களில் கிடைக்கும் அளவு |
---|---|
நார்ச்சத்து | உயர்ந்த அளவு |
கனிம ஊட்டச்சத்துக்கள் | அதிகபட்சம் கிடைக்கிறது |
கலோரிகள் | குறைந்த அளவு |
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
காளானில் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, இதனை அடிக்கடி சாப்பிடுவது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக வைட்டமிண் D அதிகம் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாவது (Immunity) மட்டுமின்றி எலும்பும் பலமாகும்.
காளான்களை தேர்வு செய்யும் முறை
- புதியதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும்
- உடைந்ததோ, காயம்பட்டதோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
- பிரகாசமான நிறம், சுத்தமான தோற்றம் கொண்டதாக இருக்க வேண்டும்
- ஈரமான, ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவற்றை தவிர்க்க வேண்டும்
காளான் சேர்க்கக்கூடிய சில உணவுகள்
- காளான் பொரியல்
- காளான் சாம்பார்
- காளான் மசாலா
- காளான் சூப்
- காளான் ரோஸ்ட்
தினமும் எவ்வளவு காளான் சேர்த்துக்கொள்ளலாம்?
வயது, உடல் எடை, உடல்நிலை போன்றவற்றை பொறுத்து காளான் அளவு மாறுபடும். சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 100 முதல் 150 கிராம் காளான்களை சாப்பிடலாம். மேலும் ஒரு நபர் வாரத்தில் 2 முதல் 3 முறை ஒரு கப் காளான்களை உட்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
எச்சரிக்கை
காளான்கள் நல்ல ஆரோக்கியத்திற்கு உதவும் என்றாலும் சில விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்:
- காளானை மிதமாகவே சேர்த்துக்கொள்ளுங்கள், அளவுக்கு மீறி சாப்பிடுவதை தவிர்க்கவும்
- விஷ தன்மை கொண்ட காளான்களை அடையாளம் காணவும் தவிர்க்கவும் அறிந்திருக்க வேண்டும்
- காளான் ஒவ்வாமை இருந்தால் அதை தவிர்ப்பது நல்லது
- மார்கெட்டில் கிடைக்கும் காளான்களை நன்கு பார்த்து வாங்கவும்
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, குளிர்கால சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் காளான்கள் சிறந்த தேர்வாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் உணவில் காளான்களை சேர்த்து,
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu