இந்த குளிர்காலத்துல வேற ரொம்ப சளியா இருக்கா..? அப்போ இத சாப்பிடுங்க.. சளி காணாம போய்டும்..! | Tulsi benefits in tamil
துளசி அப்டின்னா யாருக்கு தெரியாம இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரியும். அது மருத்துவ குணங்களும் தெரியாம இருக்காது. ஆனால் அத யூஸ் பண்ணாம இருக்காங்க. வீட்டுலயே எளிதில் விளையும் செடி . காசு போட்டு கூட வாங்க தேவையில்லை. " கைல வெண்ணெய் வெச்சுட்டு நெய்க்கு அழைக்கிறோம் "அது மாரி வீட்டுலயே துளசி வெச்சுட்டு மெடிக்கல் மெடிக்கல்னு ஓடுறோம். Tulsi benefits in tamil இதை ஒரு முறை மட்டும் சாப்பிடுங்க அப்பறம் எங்கயும் போக தோணாது. துளசில சளி நோய்க்கான பலன் மட்டும் இல்ல இன்னும் நிறைய பலன்கள் உள்ளது.
துளசி ‘மூலிகைகளின் அரசி’ என்று சொல்வார்கள்.வெண்துளசி, கருந்துளசி, நாய்த்துளசி, செந்துளசி என துளசியில் பல வகை இருக்கு.இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இங்க மட்டு இல்லை நிறைய பகுதிகளில் இருக்கு. இது பயன் தெரிந்து இனிமே அதை நாமும் பயன்படுத்தலாமா..?
துளசி பயன்கள் | Benefits of Tulasi
1. காய்ச்சலுக்கு மருந்தாகும் :
இப்பல்லாம் ஏதேதோ பெயர்ல புதுப்புது காய்ச்சல் வந்துட்டே தான் இருக்கு. இந்த பாட்டி வைத்தியத்தில் துளசி காய்ச்சலுக்கு ஒரு நல்ல தீர்வு. அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் துளசியோட மருத்துவ குணங்கள் கண்டறிந்து சொல்லியிருக்கார்கள் . 10 துளசி இலையோட 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி வடிகட்டி குடிச்சா காய்ச்சல் குறையும்.
2.சளி இருமலுக்கு மருந்தாகும் :
சளிக்கு நல்ல மருந்து இந்த துளசி. உடலில் வெப்பத்தை உண்டாக்கி சளியை அகற்றுது, உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதுக்கு உண்டு. துளசி சாறுகூட கொஞ்சம் தேன் கலந்துக் குடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குணமாகும்.
3.துளசி செடி தீர்க்கும் நாட்பட்ட நோய்கள்:
இப்பல்லாம் சர்க்கரை நோயை ஏதோ சொத்து சம்பாதிச்சு வைக்குற மாதிரி பெருமையா சொல்லிக்குறாங்க. முக்கியமா 'நீரிழிவு, உடல் பருமன்' இதெல்லாம் 35 வயசு தாண்டுனாலே பலருக்கும் வரும். தினமும் சில துளசி இலைகளை மென்னு தின்னாலே சர்க்கரை அளவு கட்டுப்படும். எடையைக் குறைக்க துளசி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து சூடுபடுத்தி, கொஞ்சம் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடை குறையும்.
4.தோல் நோய்களுக்கும் மருந்தாகும்:
துளசி இலை எலுமிச்சை சாறு விட்டு விழுது போல் அரைத்து, தோல் நோய்களுக்கு பற்றுப் போடலாம். இதனால் சொரி சிரங்கு போன்றவை குணமாகும். துளசி இலைகூட அம்மான் பச்சரிசி இலையை சம அளவு எடுத்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
5.தலைவலியை சரி செய்யும்:
துளசி ஒரு இயற்கையான தலைவலி நிவாரணி, இது ஒற்றைத் தலைவலியையும் போக்கக்கூடியது.
6. உடல் உறுப்புகளை பாதுக்காக்கும் :
துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu