தினமும் ஒரு துண்டு சக்கரை வள்ளி கிழங்கு சாப்டா இவ்ளோ நன்மையா !.... வாங்க நாமும் சாப்பிடலாம் !...
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதச் சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை சுவாச பிரச்சனை, மூட்டுவலி பிரச்சனை, வயிற்றுப்புண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதனை அன்றாட உணவில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும், அதன் நன்மைகள் என்னென்ன என்றும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். ஏனெனில், பல ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி-6 செரிமானத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கவும் உதவும். அதுமட்டுமின்றி, சர்க்கரை வள்ளிக்கிழங்கை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமப் பொலிவையும் காக்க முடியும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
1.கலோரிகள்
2.சோடியம்
3.பொட்டாசியம்
4.கார்போ ஹைட்ரேட்
5.நார்ச்சத்து
6.சர்க்கரை
7.வைட்டமின் சி
8.கால்சியம்
9.இரும்புச்சத்து
10.வைட்டமின் பி 6
11.நியாசின் (வைட்டமின் பி 3)
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நன்மைகள்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன. கரையாத நார்ச்சத்துக்கள் உங்களின் செரிமான மண்டலத்தில் தங்கி குடல் தொடர்பான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சி மலத்தை இலகுவாக்கும்.
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகை புற்றுநோய்களில் இருந்து காக்க உதவும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான அந்தோசயினின்கள் சிறுநீர்ப்பை, பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் உள்ளிட்ட புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இரத்த சர்க்கரை நோய் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்து மூலங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடும் போது, அவற்றின் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு குறைவாக இருக்கும். குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீடு உணவுகள் இரத்த சர்க்கரையை அதிகரிக்காது.
உடல் எடை இழப்பு :
சர்க்கரை வள்ளிக்கிழங்கை உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் கூட அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து போன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உடலால் உறிஞ்சப்படுவதில்லை. கார்போ ஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகரிக்கும். இவை பசியை கட்டுப்படுத்துவதுடன், முழுமையான வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் உங்களால் நீண்ட நேரம் பசியின்றி இருக்க முடியும்.
குருதி சுத்திகரிப்பு :
சர்க்கரை வள்ளிக்கிழங்கு குருதியை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் உதவுகிறது. இது சிறுநீரகங்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும் சிறந்தது.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் போன்ற அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களில் இருந்து உங்களை காக்க உதவும்.
மலச்சிக்கலை போக்கும் :
இயற்கையாகவே சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மிதமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை தடுக்கும்.இது கீமோதெரபி எடுக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் சிறந்தது. இது செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலை தடுக்க உதவும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மூளை செயல்பாடு :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மூலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் கூறுகள் அறிவாற்றல் செயல்பாடு, நினைவாற்றல், நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி உணவில் சேர்க்கலாம் ?
வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு :
சர்க்கரை வள்ளக்கிழங்கை மர வள்ளிக்கிழங்கைப் போலவே சிறுது உப்பு சேர்த்து தோலுடன் வேகவைத்து, பின்னர் தோலை நீக்கி அப்படியே உண்ணலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது .
வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு :
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சதுரமாக வெட்டி, உப்பு, மிளகு, சுவைக்கு வேண்டிய மசாலா தூவல் சேர்த்து, அடுப்பில் வறுத்து சாப்பிடலாம். இது ஸ்நாக்ஸாகவும், சைட் டிஷாகவும் பயன்படுத்தப்படலாம். இது ஆரோக்கியமானது, கைக்குச் சுலபமாக தயாரிக்கக் கூடியது.
வள்ளிக்கிழங்கு கூட்டு :
கிழங்கை நறுக்கி, மசாலா, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சமைக்கலாம். இது சாதத்துடன் நன்கு பொருந்தும், மற்றும் சத்துமிக்க விருப்பமான உணவாக இருக்கும். இதன் சுவை காரமில்லாமல் இருக்கும், மேலும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடக்கூடியதாக இருக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாவு அடை :
கிழங்கை நன்றாகக் காய்ச்சி, அதனை நெகிழ்ச்சியான மாவாக செய்து அதனுடன் அரிசி மாவு அல்லது கோதுமை மாவு சேர்த்து அடை மாதிரி செய்யலாம். இந்த அடை உணவுக்கு மென்மையானது, சுவையானது, உடலுக்கு சத்தானது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாலட் :
வேகவைத்த கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டி, அவோகாடோ, தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளுடன் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம். இது ஒரு ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக்ஸ்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பக்க விளைவுகள்
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளன. இவை சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். ஏற்கனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால், நீங்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை மிதமாக அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
செரிமான பிரச்சனைகள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதனால் சிலருக்கு வயிறு வீக்கம், வாயு அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படும். அதிக அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஒவ்வாமை உள்ளவர்கள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒவ்வாமை அரிதானது தான் என்றாலும் சிலருக்கு இது உண்டு. இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
மருந்துகள் எடுத்துக் கொள்வோர் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் சப்ளிமெண்ட்ஸ் போன்ற பொட்டாசியம் சேர்த்த மருந்துகள் எடுத்துக் கொள்வோர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.
மற்ற பிரச்சனைகள் :
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இதனை அதிக அளவில் உட்கொள்வதால் தலைவலி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல், உதடு வெடிப்பு, வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளும், கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாமா?
- நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் குறைந்த கிளைசெமிக் குறியீடே உள்ளன.
- அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு குறைந்த கார்ப்ஸ் உணவா?
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டின் காரணமாக இது ஆரோக்கியமான கார்போ ஹைட்ரேட் ஆகும். குறைந்த கார்ப்ஸ் உணவுகளை தேடுவோர் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu