நைட் 10 மணிக்கு மேல இப்படி ஆகுதா...? அப்ப உங்களுக்கு ஸ்ட்ரோக் வரப்போகுதுன்னு அர்த்தம்.. உஷார்...!
பக்கவாதம் (Stroke): அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
பக்கவாதம் என்பது மூளைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களில் தடை ஏற்படுவதனால் மூளைக்குக் குருதி செல்வது தடைப்பட்டு மூளையின் செயற்பாடுகள் மிகவிரைவாக இழக்கப்படுவதைக் குறிக்கும்.
முக்கிய அறிகுறிகள்
1. மரத்துப் போவது அல்லது பலவீனம்
திடீரென்று உடலின் ஒருபகுதி பலவீனமாகவோ அல்லது மரத்துப் போவது போன்றோ இருக்கும். இப்படி உடலின் ஒருபக்கம் பலவீனமாவதை உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2. குழப்பம் அல்லது பேசுவதில் சிரமம்
திடீரென்று குழப்பமான மனநிலை அல்லது பேசுவதில் சிரமத்தை சந்திக்க நேரிடுவது. வார்த்தைகளில் தெளிவு இல்லாமல் வாய் குளறினாலோ அல்லது வாக்கியங்களை உருவாக்க போராடினாலோ, அது பக்கவாதத்தின் அபாய அறிகுறியாகும்.
3. பார்வை பிரச்சனை
திடீரென்று பார்வையில் பிரச்சனைகள், மங்கலான பார்வை, இரண்டு இரண்டாக தெரிவது போன்ற அறிகுறிகள். இரவு நேரத்தில் இந்த பிரச்சனை மிகவும் தீவிரமாக இருக்கும்.
4. கடுமையான தலைவலி
காரணமின்றி திடீரென்று ஏற்படும் தலைவலி. சாதாரண தலைவலியில் இருந்து வேறுபட்டிருக்கும் மற்றும் ஆழ்ந்த தூக்கத்திலும் அவதிப்படுத்தும்.
5. தலைச்சுற்றல் அல்லது தடுமாற்றம்
திடீரென்று ஏற்படும் தலைச்சுற்றல் அல்லது தடுமாற்றம். இரவு நேரத்தில் நடக்கும்போது இந்த அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
முக்கிய எச்சரிக்கை
மேற்கூறிய எந்த அறிகுறிகளையும் கண்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். விரைவான சிகிச்சை உயிரைக் காக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu