சிலந்தி கடிக்கு மருந்தா..? அட வீட்டிலேயே இருக்கே..!
சிலந்தி (spider) கடித்து விட்டால் அதன் மூலம் சரும அழற்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், சிலந்தி பூச்சி கடியை சரிசெய்ய உடனேயே சில வீட்டு வைத்தியங்களை நாம் மேற்கொள்ளலாம். வீட்டு வைத்திய முறைகளைக் கொண்டு பூச்சி கடியால் ஏற்படும் வலி மற்றும் பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.
சிலந்தி கடிப்பதால் பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை என்றாலும், சில வகையான நச்சு வகை சிலந்திகளால் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலந்தி கடித்து விட்டால் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதனை அப்படியே விட்டு விடுவோம். ஆனால், அது தான் பின்வரும் நாட்களில் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். சருமத்தில் எரிச்சல், அழற்சி, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் சிலந்தி கடிப்பதால் உண்டாகும்.சிலந்தி கடிக்கு மேற்கொள்ளும் வீட்டு வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
சிலந்தி கடியின் அறிகுறிகள் | Symptoms of a spider bite
சிலந்தி கடி மற்ற பூச்சி கடித்ததைப் போலவே தோலில் சிவப்பு, அரிப்பு மற்றும் வலிமிகுந்த புடைப்பாகத் தோன்றும். கடுமையான சிலந்திக் கடிகளின் மற்ற அறிகுறிகள் அடிவயிற்றில் பிடிப்பு, வியர்வை, குமட்டல், காய்ச்சல், குளிர், தோல் கொப்புளங்கள் மற்றும் வலி ஆகியவை ஆகும்.
சிலந்தி கடியை சரி செய்யும் வீட்டு வைத்திய குறிப்புகள் | Home remedies to treat spider bites
கடித்த இடத்தை சுத்தம் செய்யவும் :
- சிலந்தி கடித்த இடத்தை நன்றாக சோப்பு கொண்டு கழுவவும்.அதுமட்டுமின்றி, சிலந்தி கடித்த இடத்தை உப்பு நீரைக் கொண்டு கழுவினால் நச்சுத்தன்மை குறையும் . சிலந்தி கடித்த இடத்தை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம் தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம்.
கடித்த இடத்தில் ஐஸ் தடவவும் :
- சிலந்தி கடித்த இடத்தில் ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். ஐஸ்பேக் ஒத்தடம் கொடுப்பது சிலந்தி கடியால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், வலியைக் குறைக்கவும் உதவும். அதேபோல் சிலந்தி கடித்தவுடன் விஷம் பரவாமல் இருக்க கடித்த இடத்தை மேலே தூக்கிப் பிடிக்கவும். இதனால் இரத்த ஓட்டம் குறையும். அதனால் விஷம் பரவுவது குறையும்.
மஞ்சள்:
- சிலந்தி கடிக்கும்போது மஞ்சளின் மருத்துவ குணங்கள் மூலம் அதற்கான பாதிப்புகளை குறைக்க முடியும். மஞ்சளில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி, ஆன்டி-பாக்டீரியல், மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் சிலந்தி கடியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.மஞ்சள் தூள் மற்றும் ஆலிவ் ஆயிலை (olive oil) சேர்த்து பேஸ்ட் தயாரிக்கவும். அந்தப் பேஸ்ட்டை சிலந்தி கடித்த இடத்தில் தடவவும். இதனை ஒரு நாளைக்கு பல முறை தடவினால் சிலந்தி கடியால் ஏற்படும் பிரச்சனைகள் குறையும்.
கற்றாழை ஜெல் :
சிலந்தி கடிக்கு கற்றாழை ஜெல் ஒரு இயற்கை சிகிச்சை ஆகும்.கற்றாழையில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள், சிலந்தி கடியால் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகின்றன. கற்றாழை ஜெல் உடனடி நிவாரணத்தை வழங்கி, பாதிக்கப்பட்ட பகுதியில் தணிவு அளிக்கக்கூடியது.
- கற்றாழையின் புதிய இலைகளை எடுத்து வெட்டி அதிலிருந்து ஜெல்லை எடுக்கவும்.
- இந்த ஜெல்லை வீக்கமடைந்த பகுதியில் மெல்ல தடவவும்.
- இப்படி செய்தால் சிலந்தி கடியால் ஏற்பட்ட வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்.
உருளைக்கிழங்கு :
உருளைக்கிழங்கு சிலந்தி கடிக்கு சிறந்த வீட்டு வைத்திய சிகிச்சை முறையாகும்.
- ஒரு புதிய உருளைக்கிழங்கைக் கொண்டு அதை சிறு துண்டுகளாக வெட்டவும்.
- இந்த துண்டுகளை கடித்த பகுதியில் மெதுவாக தேய்த்து அல்லது அதற்கு மேல் வைத்திருக்கவும்.
- இதன் குளிர்ச்சி பாதிப்புகளை குறைத்து எரிச்சலை தணிக்க உதவும். இதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை உருளைக்கிழங்கை பயன்படுத்தவும்.
பூண்டு :
சிலந்தி கடியால் (spider bite) ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை தணிக்க பூண்டு ஒரு இயற்கை சிகிச்சையாக பயன்படுகிறது. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் பண்புகள் சிலந்தி கடியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. பூண்டின் சத்து, வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றை தணிக்க உதவுகிறது.
- சில பூண்டு பற்கள் எடுத்து அதை நன்றாக அரைத்து விழுதாக மாற்றவும்.
- இதனை கடித்த பகுதியில் மெதுவாக தடவவும்.
- இதனால் வீக்கம் மற்றும் எரிச்சல் குறையும்.
சிலந்தி கடிக்கு கரித்தூள் :
சிலந்தி கடியால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க, கரித்தூளை பயன்படுத்துவது ஒரு பயனுள்ள இயற்கை முறையாகும். கரித்தூள் ஒரு சக்திவாய்ந்த நச்சு நீக்கியாகப் செயல்பட்டு, கடித்த இடத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வீக்கம், எரிச்சல் மற்றும் சிராய்ப்பு போன்றவை குறைகின்றன.
- சிறிது கரித்தூளை எடுத்து அதில் சில துளிகள் நீர் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் செய்யவும்.
- இந்த பேஸ்டை சிலந்தி கடித்த இடத்தில் மெதுவாக தடவவும்.
- இதனால் நச்சுகள் விரைவில் வெளியேறும், வீக்கம் மற்றும் எரிச்சல் குறையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu