எடுத்து ஒதுக்கிவைக்கும் சோம்பில் இத்தனை அதிசயங்கள் இருக்கா..? எவ்ளோ மிஸ் பண்றோ பாருங்க..! | Sombu benefits in Tamil
சோம்பு என்பது அபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியாப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும் பச்சடி வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது.
இயற்கையை ரசிக்க உதவும் கண்களுக்கான மருந்து இது’ எனக் கிரேக்க மருத்துவர் பிளைனி, சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தைப் பெருமைப்படுத்துகிறார். கிரேக்க புராணங்களிலும் சோம்பின் மேன்மைகள் பேசப்பட்டுள்ளன. இதன் பிறப்பிடம் மத்தியத் தரைக்கடல் நாடுகள் என்கிறது வரலாறு.
சோம்பின் நன்மைகள் | Sombu nanmaigal
1. சோம்பில் தாவர ஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் இருப்பதால், பெண்களுக்கு உண்டாகும் நோய்களைத் தடுக்க இது வரப்பிரசாதமாகும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் கொடுக்கலாம்.
2. ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு, கழிவுகளை வெளியேற்றி, செல்களை ஆரோக்கியமாக வைக்க உதவும். சமையலில் தவறாமல் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
3. ரத்தக் குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும் முக்கியக்கூறு சோம்பில் இருக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
4. சோம்பை லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு கிராம் எடுத்து, பனைவெல்லத்துடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. செரிமானத் தொந்தரவுகள் ஏற்படும்போது அலமாரியில் இருக்க வேண்டிய மருந்து சோம்புதானே தவிர, சிந்தடிக் மாத்திரைகள் அல்ல.
5. நீண்ட நாள்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக்கூட, பசி உணர்வைத் தூண்டும் மாயாஜாலப் பொருள் இந்த சோம்பு.
6. அத்திப்பழச் சதைப்பகுதியுடன் சோம்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இருமல் அடங்கும். இந்தக் கலவையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்த அணுக்கள் அதிகரித்து உடலுக்கு உற்சாகம் கிடக்கும்.
7. சோம்பு சார்ந்த மருந்துகளைப் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் சாப்பிடுவதால், தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கும் சோம்பின் சாரங்கள் சென்று சேரும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் குடல்பிடிப்பைக் குணமாக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
8. சாப்பிட்டு முடித்ததும் செயற்கை இனிப்பூட்டி மெழுகப்பட்ட சோம்பு, பல்வேறு உணவகங்களில் நமக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருப்போம். அதைத் தவிர்த்து வீட்டிலிருக்கும் சோம்பைப் பயன்படுத்துவதே சிறந்தது. சோம்பிலிருக்கும் மருத்துவக் குணமிக்க எண்ணெய்ச் சத்துகள் ஓரளவு உறிஞ்சப்பட்ட பிறகு, மீதமிருக்கும் தரம் குறைந்த சக்கைதான் சில உணவகங்களில் பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
9. சமைத்து முடித்த உணவில் சுவை குறைவாக இருப்பதாகத் தோன்றினால், கொஞ்சம் சோம்புத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால், உணவின் சுவை அதிகரித்திருப்பதை உங்கள் நாக்கின் சுவைமொட்டுகள் எடுத்துரைக்கும்.
10. இறைச்சிகளின் மீதும் முட்டை உணவுகளின் மீதும் சோம்புத்தூள் தூவினால் சுவை கூடுவதுடன் செரிமானமும் எளிதாகும்.
சோம்பின் பயன்கள் | Benefits of Fennel சீட்ஸ்
1. ஜீரண சக்தி அதிகமாக, வாயுத்தொல்லை நீங்க, பசி அதிகரிக்க:
சாப்பிட்டதற்க்கு அப்புறம் தினமும் கொஞ்சம் சோம்ப எடுத்து வாயில போட்டு மென்னு, சாற கொஞ்சம் கொஞ்சமா விழுங்கி வந்தா உணவு சீக்கிரமா ஜீரணமாகும். அதோட வாயுத் தொல்லையும் சரியாகும். சோம்பு சாப்பிட்டா பசியை நன்றாக தூண்டும்.
2.குடற்புண்கள் ஆற:
தினசரி உணவுல சோம்பு சேக்குறதுனால குடற்புண்கள் ஆறும்.மாதவிலக்கு வயிற்றுவலி குணமாகும்.
3.கருப்பை பலப்பட:
சோம்பை தினமும் ரெண்டுவேள பனங்கற்கண்டு சேத்தோ இல்ல தனியாவோ 1கிராம் சாப்பிட்டு வந்தா மாதவிலக்குல ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.கருப்பை பலமாகும்.
4.கல்லீரல் பலம் பெற:
பெண்ணுக்கு கருப்பை பலப்படும். சோம்ப பொடி செஞ்சு தேனுடன் கலந்து சாப்பிட்டால் கல்லீரலுக்கு பலம் கிடைக்கும்.
5.வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் சரியாக:
சோம்பு கசாயம் செஞ்சு குடிச்சு வந்தால் வறட்டு இருமல், மூக்குல நீர் வடிதல் சரியாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu