மழைக்காலம் தொடங்கியாச்சு..அதுனால சருமத்தை நல்லா பாத்துக்கணும்ல..!உங்களுக்காக ஒரு சில டிப்ஸ் !..| Skin care tips for rainy season in tamil

மழைக்காலம் தொடங்கியாச்சு..அதுனால சருமத்தை நல்லா பாத்துக்கணும்ல..!உங்களுக்காக  ஒரு சில டிப்ஸ் !..| Skin care tips for rainy season in tamil
X
மழைக்காலம் சருமத்தை மிகவும் பாதிப்படைய செய்கிறது. சிலருக்கு தோல் வெடிப்பு ஏற்படும் அல்லது எண்ணெய் பசைத் தன்மையுடன் இருக்கும். சருமத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெயில் காலம் முடிஞ்சு மழைக்காலம்(Skin care tips for rainy season in tamil) வந்தாலே போதும், கூடவே இந்த பனிக்காலமும் சேர்ந்து வந்துருது. இதனால நோய்கள் மட்டும் இல்லாம முகத்துல பல பிரச்சனைகள் வந்துருது,முக்கியமா முகத்துல பனி வெடிப்பு வந்துருது.

கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.ஆனால் மழைக்காலம்(Skin care tips for rainy season in tamil) சருமத்தை மிகவும் பாதிப்படைய செய்கிறது. சிலருக்கு தோல் வெடிப்பு ஏற்படும் அல்லது எண்ணெய் பசைத் தன்மையுடன் இருக்கும்.எனவே இந்த நேரத்தில் சருமத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.


தடுக்கும் வழிமுறைகள் | Skin care prevention from rainy season

  • தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும்(Skin care tips in tamil)ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • வாரத்திற்கு ஒருமுறை ஸ்கின் எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு சருமம் தெளிவாகும். முகப்பரு நீங்கும்.
  • சன் ஸ்கிரீன்(Sunscreen) பயன்படுத்துவது அவசியம். மழைக் காலங்களிலும் சன் ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும்.
  • எண்ணெய் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மேட் ஃபினிஷிங் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்த வேண்டும்.
  • மேக்கம் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் மழை காலத்தில் மேக்கம் நனைந்தாலும் அதனால் எந்த சரும பாதிப்பும் ஏற்படாது.
  • மாய்ஸ்சரைசர் சருமத்தை ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமம் இருந்தால் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை தேர்வு செய்ய வேண்டும்.
  • மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம்(Skin care products for oily skin) கொண்டவர்கள் இரண்டு முறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

  • டோனரை பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால் களிமண் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இது எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துகிறது.
  • சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.
  • சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.
  • உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil