முட்டையின் வெள்ளைக்கருவில் இவ்வளவு நன்மையா !... நார்மல் ஸ்கின் முதல் ஆயில் ஸ்கின் வரை எல்லாருக்குமா !....
சரும பராமரிப்பிற்கு ரசாயனங்கள் கலந்த பொருள்களை பயன்படுத்துவதை காட்டிலும் வீட்டிலுள்ள இயற்கையான பொருள்களைப் பயன்படுத்துவதில் நிறைய நன்மைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. அவை மிக மென்மையானதாகவும் ரசாயனக் கலப்பு இல்லாமலும் இருக்கின்றன. இந்த வெள்ளைக்கருவை நாம் முடிக்கும் ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். சருமத்திற்கு பொலிவூட்டும், மற்றும் முகம் பற்றிய பிரச்சனைகளைத் தீர்க்க இதனை முகக்கவசமாக பயன்படுத்தலாம்.
முட்டையின் வெள்ளைக் கரு உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஒரு உணவுப் பொருளாகும். இது முக்கியமான புரதங்கள் மற்றும் குறைந்த அளவு கலோரி கொண்டது. அதனால் உடலின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. முட்டையின் வெள்ளைக்கரு உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவுக்கு சருமப் பராமரிப்பிற்கும் பயன்படும்.இதை சருமத்தின் அழகை மேம்படுத்த எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
சருமத்துக்கு முட்டையின் வெள்ளைக்கருவை பயன்படுத்துவதன் நன்மைகள்
சருமத்துக்கு முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்துவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சில,
சுருக்கங்கள் மறையும் :
முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது .சருமத்திற்கு பொலிவூட்டும், மற்றும் முகம் பற்றிய பிரச்சினைகளைத் தீர்க்க இதனை முகக்கவசமாக பயன்படுத்தலாம்.
சரும துளைகள் சிறிதாக மாற்றும் :
பெரிய சருமத்துளைகள் உள்ளவர்களுக்கு முட்டையின் வெள்ளைக்கரு சிறந்த தீர்வாக இருக்கும். சருமத் துளைகளின் அளவைக் குறைக்கும்.
பருக்களை குறைக்கும் :
சருமத்தில் சீபம் சுரப்பை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் தடுக்கவும். கட்டுப்படுத்தவும் செய்யும்.
தளர்ந்த சருமம் இறுக்கமாக மாறும் :
முட்டையின் வெள்ளைக் கருவை சருமத்தில் பயன்படுத்தும் போது தொங்குகின்ற தளர்வான சருமத்தை இறுக்கமாக்கும்.
ஆயில் கண்ட்ரோல் :
சருமத்தில் அதிக எண்ணெய் பசையுடன் இருப்பவர்களுக்கு அதன் அளவைக் குறைத்து ஆயில் கண்ட்ரோல் செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக் கருவுக்கு உண்டு.
மென்மையாக வைத்தல் :
முட்டையின் வெள்ளைக் கருவை சருமத்துக்கு தொடர்ச்சியாக பயன்படுத்தி வரும்போது சருமம் மிகவும் மென்மையாக இருக்கும் .
எலும்பு ஆரோக்கியம்:
முட்டையின் வெள்ளைக் கருவில் கல்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து இருக்கிறது, இது எலும்புகளை வலுவாக்கி, எலும்பு முறிவு மற்றும் எலும்பு அடர்த்தி குறைவு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
முட்டையின் வெள்ளைக் கருவை சருமத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு :
முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் அப்ளை செய்து உலரவிட்டுபின் கழுவிவர சருமத் துளைகள் சிறிதாகும்.
சருமம் பளபளப்பாக:
முட்டையின் வெள்ளைக் கருவுடன் தயிர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவிவர சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
நேரடியாக பயன்படுத்துதல் :
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து நன்கு பீட் செய்து அதை நேரடியாக முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமம் மென்மையாக மாறும்.
தேனுடன் சேர்த்து :
முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேனைச் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து உலரவிட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.இது பருக்களைக் குறைக்கும்.
ஸ்கிரப்பாக :
முட்டையின் வெள்ளைக்கருவுடன் பொடித்த ஓட்ஸை சேர்த்து ஸ்கிரப்பாக வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தி வர சருமத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
முட்டை வெள்ளைக்கரு பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை
வறண்ட சருமம் உள்ளவர்கள் - அதிகப்படியான வறண்ட சருமம் உள்ளவராக இருந்தால் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் சருமம் மேலும் வறட்சியடையும்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் - முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் பயன்படுத்தும் முன் சிறிதாக பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்துவது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu