ஜலதோசத்துக்குலாமா டாக்டர்கிட்ட போறீங்க..! இத பண்ணா போதுமே!

ஜலதோசத்துக்குலாமா டாக்டர்கிட்ட போறீங்க..! இத பண்ணா போதுமே!
X
மழைக்காலம் தொடங்கியது முதலே மக்கள் பலரும் இருமல்,தும்மல்,ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனால் ஏற்படும் நோய்கள் என்ன அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் பலரும் இருமல்,தும்மல்,ஜலதோஷம், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மக்கள் தனது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.சுற்றுச்சூழல், சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். பலருக்கு சளித்தொல்லை பாடாய் படுத்தும். இதனால் உடம்பு வலி, தலை வலி, காய்ச்சல் , தொண்டை வலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.


ஏறத்தாழ 200 வகை வைரஸ் கிருமிகள் ஜலதோ‌ஷத்தை உண்டாக்கும் நிலையில் சில உணவுப் பொருட்களால் அதனை தடுக்க முடியும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே இந்த பாதிப்புகளை சரி செய்து ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

மழைக்காலத்தில் மூக்கு அடைத்துக் கொண்டு சளி பிடிப்பது போன்று இருக்கும். அத்தகைய சூழலில் மணத்தக்காளி கீரையை சூப் செய்து அருந்தினால் உடனடியாக ஜலதோஷம் விலகும்.மணத்தக்காளி சூப்பினை சூடாக அருந்தினால் தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு, ஜலதோஷம் விலகும். நறுக்குமூலம் எனப்படும் கண்டதிப்பிலியிலும் சூப் செய்து அருந்தலாம்.

மஞ்சள் (turmeric) :

  • வீட்டின் சமையலறையில் தவறாமல் இடம்பெறும் உணவுப்பொருட்களில் ஒன்றான மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • மஞ்சளில் உள்ள குர்குமின் இயற்கையான எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது. எனவே இது எந்தவொரு நோய் அல்லது நோயால் ஏற்படும் வீக்கத்திற்கு எதிராக போராட உடலுக்கு உதவுகிறது.

இஞ்சி டீ (Ginger tea) :

  • இஞ்சி டீ என்றதும் டீத்தூளுடன் இஞ்சி கலந்து தயாரிக்கும் டீதான் நினைவுக்கு வரும். ஆனால் இது அந்த இஞ்சி டீ அல்ல. இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் டீ. இதனை அருந்தினால் சளி பாதிப்பு குறையும்.

தூதுவளை ரசம் (Solanum trilobatum) :

  • தூதுவளை (Solanum trilobatum)கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும்.

சுண்டைக்காய் வத்தல் (Turkey Berry) :

  • சுண்டைக்காய் வத்தலை தனியாக வறுத்துப் பொடித்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சளித் தொந்தரவுகள் விலகும். இதேபோல் சின்ன வெங்காயத்தை உரித்து மதிய உணவுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் சளியை விலகச் செய்யும்.

சுக்கு காபி (Suku coffee) :

சுக்கு காபி (Suku coffee)என்பது பால் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரு மூலிகை பானமாகும். சுக்கு காபி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது. சுக்கு காபி சாப்பிடுவதால் காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்றுப்போக்கு, தொண்டைப்புண், தொண்டை தொற்று போன்ற பருவகால நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் | Foods to avoid during the rainy season

மாலை நேரச் சிற்றுண்டியாக எண்ணெயில் பொரித்த வடை, போண்டா, பஜ்ஜி போன்ற உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடக்கூடாது. தெரு உணவு மற்றும் வறுத்த தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும் . இரவு உணவும் ஆவியில் வெந்த உணவுகளாகவோ அரிசி மற்றும் சிறுதானிய உணவுகளாகவோ இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூண்டுப்பால் அருந்துவது நல்லது.

பூண்டுப்பால் (Garlic milk) :


தேவையான பொருட்கள் :

1. பூண்டு பற்கள்

2. பால்

3. தண்ணீர்

4. மிளகுத்தூள்

5. மஞ்சள் தூள்

6. பனங்கற்கண்டு

செய்முறை:

10, 12 பூண்டுப்பற்களை தோல் உரித்து பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். முக்கால்வாசி வேக்காட்டின்போது மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி நன்றாகக் கடையவேண்டும். இதனை சாப்பிட்டால் மூக்கடைப்பு, நெஞ்சுச்சளியால் ஏற்படும் மூச்சுத்திணறல், இருமல், தலைபாரம் போன்றவை நீங்கி இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!