வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!

வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!
X
சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும், இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும் என பல நன்மைகள் காணலாம்.

இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்தி கள்ளிப்பழம்(Sappathikalli). இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும்.

சப்பாத்திக் கள்ளி என்பது கள்ளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும்.பொதுவாகக் காணப்படும் சப்பாத்திக் கள்ளி என்பது இந்திய சப்பாத்திக் கள்ளி என்ற சிற்றினமாகும். சமையலுக்கு பிரிக்கிளி சப்பாத்திக் கள்ளி இனத்தின் கனிகள் பயன்படுகிறது.இந்த பேரினத்தை ஆங்கிலத்தில் குறிக்கும் பெயரான ஒபுன்டா என்பது பண்டைய கிரேக்க நகரான ஒபஸ் என்ற பெயரில் இருந்து பெறப்பட்டது. அங்கு சமையல் தேவைக்காக இவற்றை பயிரிட்டு வளர்த்ததால் இப்பெயர் பெற்றது.இது பெண்களுக்கு மிகவும் நல்லது.

வறட்சி நிறைந்த பகுதியில் கரடுமுரடு முட்களுடன் காணப்படும் இந்த சப்பாத்தி கள்ளிகள். ஆனால் வைட்டமின் C, B, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், தாவர ஊட்டச்சத்துகள், கால்சியம், மெக்னீசியம் , பீட்டா கரோட்டின் ஏன ஏகப்பட்ட சத்துக்களை தன்னுள் வைத்திருக்கிறது இந்த வறண்ட சப்பாத்தி கள்ளிகள்.





சப்பாத்திக்கள்ளியின் நன்மைகள் | Sapathi Kalli Nanmaigal

1. சப்பாத்தி கள்ளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட இதயத் துடிப்பு சீரடையும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் சரிசெய்து விடும். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் மாரடைப்பை தவிர்க்க முடியும்.

2.இன்றைய மாறிவிட்ட சூழலில் நூற்றில் அறுபது பெண்களுக்கு மேல் இந்த பிசிஓடி என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது. இதனால் கருமுட்டை பலமில்லாமல் போவது, குழந்தை உண்டாவதில் சிரமம், மாதவிடாய் பிரச்சினைகள், கருக்கலைவு ஆகிய பிரச்சினைகள் அதிகமாக உண்டாகின்றன.

3.இந்த சப்பாத்திக் கள்ளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு முட்டை வளர்ச்சி சீராகும். குழந்தையே இல்லை என்று நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்களுக்கு இந்த பழம் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

4.ஆண்மைக் குறைபாடு, விந்து உயிரணுக்கள் ஆரோக்கியமாக இல்லாதது என ஆண்களுக்கு இருக்கும் பல பிரச்சினைகளை இந்த பழம் தீர்க்கிறது. கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை பெண்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்தில் பிறக்குமாம்.

5.குங்குமப்பூவை விட இந்த சப்பாத்திக்கள்ளி பழம் சிறந்தது. வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் தானாக அழிந்து விடுமாம்.

6.இந்த பழங்களை குழந்தைப் பேறுக்காக பெண்களும், விந்து உயிரணு உற்பத்திக்காக ஆண்களும் சாப்பிட்டு வரும்போது மற்ற எந்தவித இனிப்பான பொருள்களும் சாப்பிடக் கூடாது. டீ, காபி கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ளவேண்டும்.

7.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சப்பாத்தி கள்ளி பழத்தை தாராளமாக கையிலெடுக்கலாம். காரணம், மிகக்குறைந்த கலோரிகள் இதில் உள்ளன. இதனால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.கொழுப்பு படிவதை தடுப்பதால் இதயம் காக்கப்படுகிறது. செரிமானம் அதிமாவதால் மலச்சிக்கல் தீர்ந்து, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. அத்துடன் பெருங்குடலை சுற்றியுள்ள நச்சுக்களும் வெளியேறுகின்றன.

8.சிலசமயம் கருச்சிதைவையும் உண்டுபண்ணிவிடும். இந்த சினைநீர்க்கட்டிகளை கரைப்பதற்கு உதவுவதுதான் இந்த சப்பாத்தி கள்ளி பழம்.வாரம் 3 முறை சாப்பிட்டு வந்தால் கர்பப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகள் அழிந்து விடும்.





சப்பாத்திக்கள்ளியை ஜூஸ்ஸாகவும் குடிக்கலாம் | sappathi kalli juice

இந்த பழத்தை பறிப்பதே பெரிய கஷ்டம். காரணம், குட்டி குட்டியாக நிறைய முட்கள் நிறைந்திருக்கும். அதனால் இந்தப் பழத்தின் தோலை நீக்கிவிட்டே சாப்பிட வேண்டும். இந்த சப்பாத்தி கள்ளி பழத்திலிருந்து ஜூஸ் செய்து குடிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு முட்களை விலக்கி எடுக்கப்பட்ட வெறும் பழத்தை அந்த தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.இப்போது தண்ணீரிலிருந்து சப்பாத்தி கள்ளி வெளியே எடுத்து வைத்து ஆறவிட்டு அதன் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், இளநீர் போன்றவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து இறுதியில் வடிகட்டி குடிக்கலாம்.உடலுக்கு மிகவும் சத்து தரும் கனி.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!