ஆரோக்கியத்துக்கு அறுசுவையின் பங்கு...! நம்பவே முடியாத தகவல்கள்..!
சுவையில் ஆறுவகை உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று . இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என இவை நம் உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் இவை ஒன்றுசேர்த்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அறுசுவை (ஆறுபகையான சுவைகள்) என்பது பாரம்பரிய சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் மிக முக்கியமான தன்மையாகக் கருதப்படுகிறது. இது உடலின் சரியான சமநிலையை பாதுகாக்க, நோய்கள் ஏற்படாமல் தடுக்க, முழுமையான ஆரோக்கியத்தை வழங்க முக்கியமானது. ஒவ்வொரு சுவையும் தனித்தன்மை கொண்டது, மற்றும் ஒவ்வொன்றும் உடலின் வித்தியாசமான தேவைகளை பூர்த்தி செய்யும்.இந்த அறுசுவைகளும் எந்தெந்த பொருட்களில் உள்ளது. அவற்றால் என்னென்ன நன்மை என தெரிந்துகொள்வோம்.
ஆறுசுவைகள் என்னென்னவென்றால்,
1.இனிப்பு
2.புளிப்பு
3.உவர்ப்பு
4.கசப்பு
5.கார்ப்பு
6.துவர்ப்பு
இனிப்பு
- இனிப்புகள் பிடிக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள் . பெரும்பாலான மக்கள் இந்த இனிப்புகளை விரும்பி உண்கின்றனர் . இனிப்பு உணவுகள் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன.இது அதிகமானால் எடைகூடும். தூக்கம் உண்டாகும்.
- இனிப்புச் சுவை உள்ள உணவுகள் : பழங்கள், உருளை, கேரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில் இனிப்புச் சுவை உள்ளது.
புளிப்பு
- புளிப்பு சுவை, செரிமானத்தை தூண்டி, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இது பசியின்மையை சரிசெய்யும், வாயு பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும்.
- இது அளவுக்கு அதிகமாக உண்டால் பற்களை பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும்.
- புளிப்புச்சுவை உள்ள உணவுகள் : எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர்,மோர் இவற்றில் புளிப்பு உள்ளது.
உவர்ப்பு
- உவர்ப்பு சுவை உடலின் நீர் சமநிலையை கட்டுப்படுத்துகிறது. உப்பு மிகுந்த உணவுகள் உவர்ப்புச் சுவையை தருகின்றன. உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். ஆனால் அளவுக்கு மீறாமல் சாப்பிடுவது அவசியம், இல்லையெனில் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.மற்ற சுவைகளை சமன்செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும்.
- உவர்ப்புச் சுவை உள்ள உணவுகள் : கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை உள்ளது.
காரம்
- பசியைத் தூண்டும். இது உணவு செரிமானத்தை விரைவாக்கி, கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது. உடலை இளைக்க வைக்கும். உடலில் சேர்த்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும்.
- காரச்சுவை உள்ள உணவுகள் : வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றில் காரச்சுவை உள்ளது.
கசப்பு
- கசப்பு சுவையான உணவுகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகின்றன. இதனால் தோல் பிரச்சினைகள் குறையும்.பெரும்பாலும் இந்த சுவையை பலரும் விரும்புவதில்லை. ஆனால் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இது. நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகியவற்றை தணிக்கக் கூடியது.
- கசப்புச்சுவை உள்ள உணவுகள் : பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் கசப்புச்சுவை உள்ளது.
துவர்ப்பு
- சுவையான உணவுகள், உடலின் கொழுப்பை குறைத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்புப் பிரச்சனைகளை சீராக்க உதவுகின்றன. இது ஜீரண மண்டலத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்.உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
- வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை சரிசெய்யும்.பண்டிகை நாட்களில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும் இந்த அனைத்துச் சுவைகளையும் உண்ண, உடல் ஆரோக்கியம் அதிகரித்து நோய்கள் வராது நம்மைக் காக்கும்.
- துவர்ப்பு சுவைகள் உள்ள உணவுகள் : வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்றவற்றில் துவர்ப்புச் சுவை உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu