செவ்வாழை பழத்தில இவ்ளோ சத்து இருக்கா..? அப்படி என்ன தான் இருக்கு பார்ப்போமா..!
வாழைப்பழம் பொதுவா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். செவ்வாழை சொல்லவே தேவை இல்லை அவ்ளோ பிடிக்கும்.இது பெரும்பாலும் தோப்பாக தான் காணப்படும்.இது உடலுக்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு வாழைப்பழம் ஆவது சாப்பிட வேண்டும்.தினமும் செவ்வாழை சாப்பிடுவதினால் உடல் கால்சியம் சத்தை அதிகமாக எடுத்து கொள்கிறது அதனால் எலும்புகள் வலிமையடைகிறது. எனவே எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிடுங்கள். Red banana benefits in tamil
செவ்வாழைப் பழத்தின் நன்மைகள் | Red banana benefits in Tamil
1.செவ்வாழைப் பழம் உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் உதவுகிறது.
2.உயிர்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஒரு பழமாகவும் செவ்வாழை பழம் இருக்கிறது.
3.இவற்றில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்க வல்லதாக இருக்கின்றன.
4.மாலைக்கண் நோயால் அவதிப்படும் மக்கள் தங்கள் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
5.தினந்தோறும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வருவதால், உடலில் ஏற்படும் சொறி - சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும்.
6.நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்குப்பின், தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும்.
7.இந்த அற்புத பழத்தை வாரம் 1 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்புகளுக்கு விடுதலை கிடைக்கும். தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் செவ்வாழைப் பழத்திற்கு இருக்கிறது.
8.எல்லா வகை வாழைப்பழங்களும் நல்ல செரிமான சக்தி கொண்டவையாக இருக்கின்றன. அந்த வகையில், செவ்வாழைப்பழமும் நமது ஜீரணசக்திக்கு உதவும் முக்கிய வாழைப்பழமாக இருக்கிறது. இவற்றை அன்றாட இரவு உணவுக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி கிடைக்கும்.
9.கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை படைத்ததாக செவ்வாழைப் பழம் உள்ளது.இது உடலுக்கு மிகவும் நல்லது.
செவ்வாழை பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் | Which time is best to eat red banana
இப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிட்டால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இதனை சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி அல்லது காலை உணவுக்குப் பிறகு 11 மணி மற்றும் மாலை 4 மணி அளவில் சாப்பிடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu