இதுல A to Z எல்லாமே இருக்கு...வேறென்ன வேணும்... இன்றே சாப்பிடுவோம்...!

கனிமம், கால்சியம், புரதம், இரும்பு,கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து என அனைத்து சத்துக்களும் இந்த உணவில் உள்ளது. அதை பற்றி இன்னும் தெரிந்துகொள்வோம்.

நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளுள் ஒன்று களி ஆகும்.இது மிகவும் சத்தான உணவு ஆகும்.நம் முன்னோர்கள் உண்ட உணவு களி தான்.அதனால் தான் அவர்கள் நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்தனர்.எவ்வித நோயும் அவர்களை பாதிக்கவில்லை.ஆனால் இன்று களி என்ற ஒன்று இருந்ததே அடையாளம் இல்லாமல் போனது.நாவில் சுவை கொடுக்கும் துரிவிகித உணவு மக்களிடையே விருப்பத்தை ஏற்படுத்தி நோய் என்னும் கொடிய கூண்டுக்குள் வாழ்கின்றனர்.அதை பார்த்து மீண்டும் நமது பாரம்பரிய உணவான களியை சாப்பிட ஆர்வம் காட்டுகிறார்கள். அதை சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும் ,அதன் செய்முறைகளை பார்ப்போமா?

கேழ்வரகு என்கிற ராகி களி சத்துக்கள் :

கேழ்வரகு என்னும் ராகி கடுகைப் போன்று சிறிய சிறிய உருண்டை போல அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்தியர்களின் உணவில் குறிப்பாக,தென்னிந்தியர்களின் உணவில் இந்த ராகி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.கேழ்வரகு உடலைக் குளிர்ச்சியாக்கும் பண்பு கொண்டது. அதனால் கோடை காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த கேழ்வரகில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு பிரச்சினை முதல் உடல் எடையைக் குறைத்தல் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.இதில் உள்ள சத்துக்கள் மிகவும் அதிகம்.

கேழ்வரகு என்று சொல்லக்கூடிய ராகியில், பைட்டோகெமிக்கல்கள் அடங்கியிருக்கிறது. இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பேருதவி புரிகிறது. நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்த தானியமாக கேழ்வரகு விளங்குகிறது . இதனால் எலும்புகள் வலுவாவதுடன் செரிமானமும் எளிதாகும்.எலும்பு, மூட்டுகளுக்கு இந்த ராகி நல்லது.

செய்முறை :

ராகி களி என்பது ராகி மாவை கொதிக்கும் நீரில் சேர்த்து வேகவைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைப்பது.மாவு வேக வேக கட்டிப்பிடிக்க ஆரம்பிக்கும். மாவு கட்டித் தட்டாமல் கைவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.ராகி மாவு நன்கு வெந்ததும் இறக்கி வெதுவெதுப்பாக இருக்கும் போதே கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி வைத்து விடுவார்கள். அதை அப்படியே குழம்பு, பருப்பு, கூட்டு துவையல் ஆகியவற்றோடும் கறி குழம்பிலும் சேர்த்து சாப்பிடுவார்கள்.இந்த உருண்டைகளை தண்ணீருக்குள் போட்டு குளிர வைத்து அடுத்த நாள் கெட்டித் தயிர் கலந்து கரைத்து கூழாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

கம்பு களி சத்துக்கள் :

பொதுவாக நம் அன்றாட உண்ணும் அரிசி சாதத்தை விட தானியங்களில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது . அந்த வகையில் அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துக்களுமே அதிகம் கொண்ட ஒரு தானியமாக கம்பு உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம் ஆகும்.இந்த அற்புதமான தானியத்தை கூழ் செய்து பருகி வந்தாலும் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

செய்முறை :

கம்பைச் சுத்தம் செய்து ஒரு மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அடி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி விடவும். பிறகு அவை நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறலாம் .இவற்றை உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிட்டு வரலாம். இதுவும் உடலுக்கு வலிமை சேர்க்கும்.

குதிரைவாலி களி சத்துக்கள்:

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. 65.5 கிராம் கார்போ ஹைட்ரேட்டும் 13.6 நார்ச்சத்தும் உள்ளது.அதாவது 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால் 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம். இதில் கிட்டத்தட்ட 65 கலோரிகள் வரை கிடைக்கும் என்கிறார்கள்.

செய்முறை:

குதிரைவாலியை சுத்தம் செய்து ஒரு மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அடி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் குதிரைவாலி மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறி விடவும். பிறகு அவை நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறலாம். இவற்றை உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிட்டு வரலாம். இதுவும் உடலுக்கு வலிமை சேர்க்கும்.

சாமை களி சத்துக்கள்:

சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவாக இந்த அரிசி உள்ளது. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த குதிரைவாலி அரிசி தாமதப்படுத்துவதுடன் உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால் இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். சாமையில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் B, நுண்ணூட்ட சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுவதுடன் கண் நரம்புகளுக்கு இந்த சாமை ஏற்றது. கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகள், பற்களின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. நிணநீர் மண்டலத்தை வலுவாக்கக்கூடியது.மிகுந்த ஆற்றல் தர கூடியது.

செய்முறை:

சாமை களி என்பது சாமை மாவை கொதிக்கும் நீரில் சேர்த்து வேகவைத்து சிறிது உப்பு சேர்த்து வேக வைப்பது.மாவு வேக வேக கட்டிப்பிடிக்க ஆரம்பிக்கும். மாவு கட்டித் தட்டாமல் கைவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.சாமை மாவு நன்கு வெந்ததும் இறக்கி வெதுவெதுப்பாக இருக்கும் போதே கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு உருண்டைகளாக உருட்டி வைத்து விடுவார்கள் .இந்த உருண்டைகளை தண்ணீருக்குள் போட்டு குளிர வைத்து அடுத்த நாள் கெட்டித் தயிர் கலந்து கரைத்து கூழாகவும் எடுத்துக் கொள்ளலாம்.இதை அரிசி சேர்த்து இனிப்பு களியாகவும் சாப்பிடலாம்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil