என்ன சொல்ரீங்க, பப்பாளியுடன் சேர்த்து இதெல்லாம் சாப்பிடக் கூடாதா ?

என்ன சொல்ரீங்க, பப்பாளியுடன் சேர்த்து இதெல்லாம் சாப்பிடக் கூடாதா ?
வெயிலின் சீசனில் மிகவும் பிரபலமான பழமாக பப்பாளி கருதப்படுகிறது. இது உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருந்தாலும், சில உணவுகளுடன் இதனை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, பிளாக் டீ அல்லது கிரீன் டீயுடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமான கோளாறுகள் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கிரேப் ஃப்ரூட், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களுடன் சேர்த்தும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. இவை சேரும் போது, அதிக அசிடிட்டி ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜீரண சக்தியை பாதிக்கும். அதனால், ஊறுகாய் மற்றும் பழைய சாதம் போன்றவற்றுடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடக் கூடாது. இதில் உள்ள ப்ரொபயோடிக்ஸ் மற்றும் பப்பாளியில் உள்ள என்சைம்கள், ஒருங்கிணையாத வகையில் செயல்பட்டு செரிமான சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும், உடலில் ஏற்கனவே ஜீரணக் கோளாறு இருப்பவர்கள், பப்பாளியுடன் கார உணவுகளை சேர்த்து சாப்பிடுவது கூடாது. இது உடலின் உஷ்ணத்தை அதிகரித்து, வயிற்று வலியைக் கூட உண்டாக்கும்.
இவை தவிர, புரதம் நிறைந்த இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுகளுடன் பப்பாளியை சேர்த்து சாப்பிடும்போது, தொண்டை எரிச்சலும் வாயில் கசக்கமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனாலேயே, இந்த வகை உணவுகளுடன் பப்பாளியை தவிர்க்கவேண்டும். அதேபோல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுடன் பப்பாளி சேர்க்கப்படும்போது, இது வயிற்று உப்பசத்தையும் வாயுப் பிரச்சனையையும் தூண்டக்கூடும். எனவே, பப்பாளி சாப்பிடும் போது அதனுடன் சேர்க்கக்கூடிய உணவுகளை விவேகமாக தேர்வு செய்தால், அதன் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu