அடிக்கடி உடம்பு வலிக்குதா? மெடிக்கலுக்கு போகாம இங்க போங்க..! வலிக்கு இங்க சூப்பர் மருந்து இருக்கு..!

அடிக்கடி உடம்பு வலிக்குதா? மெடிக்கலுக்கு போகாம இங்க போங்க..! வலிக்கு இங்க சூப்பர் மருந்து இருக்கு..!
X
இயற்கையாகவே சில பொருட்களில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் உங்களின் வலியை நீக்கி நிவாரணம் பெற உதவும். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என தெரிந்து கொள்வோம் வாங்க.

நம்ம கிச்சன்( Kitchen ) இருக்க சில பொருட்களை பயன்படுத்தியே பல உடல் உபாதைகளையும், வலிகளையும் சரி செய்ய முடியும். இயற்கையாகவே சில பொருட்களில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் நம்மளோட வலியை நீக்கி நிவாரணம் பெற உதவும். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, சோம்பேறியான வாழ்க்கை முறை, உடல் உழைப்பின்மை போன்றவற்றின் காரணமாக உடலில் எங்கு தொட்டாலும் வலி ஏற்படுவது பொதுவானது தான். கை, கால்களில் வலி, தசைகளில் வலி போன்ற எல்லா வகையான வலிகளுக்கும் வலி நிவாரணியைத் தான் தேடுகின்றனர்.ஆனாலும், வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு பல வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

இயற்கையாகவே சில பொருட்களில் (Natural remedies) உள்ள குணப்படுத்தும் பண்புகள் உங்களின் வலியை நீக்கி நிவாரணம் பெற உதவும். எந்தெந்த பொருட்கள் எந்தெந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என தெரிந்து கொள்வோம் வாங்க.

வலி நிவாரணிகளாக செயல்படும் சில கிச்சன் பொருட்கள் | kitchen remedies for pain killers

மஞ்சள் (turmeric) :


  • மஞ்சளில் வர்ண (தோலுக்கு நல்லது) பண்பும் உள்ளது, இது தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். மஞ்சளின் வழக்கமான பயன்பாடு வீக்கம் மற்றும் இரத்தம் தொடர்பான பிற கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். மஞ்சள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த பொருள் என்றால் அது மஞ்சள் தூள் என எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் நம் முன்னோர்கள் காயங்கள், வீக்கம் மற்றும் வலி உள்ள இடங்களில் மஞ்சள் தூளை சூடுபடுத்தி பத்து போட்டனர். அதேபோல், மஞ்சள் தூளை பாலுடன் கலந்து குடிப்பதால் சளியில் இருந்தும், வாய்ப்புண்களில் இருந்தும் நிவாரணம் பெற முடியும்.காயத்தின் மீது மஞ்சள் தூளை பூசுவது, காயத்தை விரைவில் ஆற்ற உதவும்.

கிராம்பு (clove) :


  • கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
  • உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. மேலும் ,ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

இஞ்சி (Ginger) :


  • இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • ஆன்டி -ஆக்சிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த இஞ்சி மூட்டு வலி மற்றும் தசை வலிக்கு சிறந்த வலி நிவாரணியாகும். ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு (Garlic):


  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்த உதவும் சமையலறை மசாலா என்றால் அது பூண்டு தான். பூண்டின் முக்கிய நன்மை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் ஆகும்.
  • பூண்டு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இது உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

தயிர் (Curd) :


  • தினமும் தயிரை சாப்பிடுவதால், இதயம் வலுப்பெறும். உயர் ரத்தஅழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது.
  • சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் சி-யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌ கொ‌ண்டு‌ள்ளது.

இலவங்கப்பட்டை(Cinnamon) :


  • இலவங்கப்பட்டை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மசாலாப் பொருள். உடலில் உள்ள புற்றுநோயை உண்டாக்கும் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடப் பயன்படுகிறது. இது பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் மசாலாப் பொருள். இலவங்கப்பட்டை பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கவனக்குறைவுக் கோளாறுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • இலவங்கப்பட்டையை பொடியாக்கி எடுத்துக் கொள்வதன் மூலம் சளி, காய்ச்சல், அஜீரணம், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் மாதவிடாய் கால வயிற்று வலியில் இருந்தும் நிவாரணம் பெற உதவும். காரணமேயின்றி உடலின் அனைத்து பகுதியிலும் வலி இருந்தால் இலவங்கப்பட்டை எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதன் மூலம் தசை வலி பறந்து போய்விடும்.

காபி (Coffee) :


  • தலைவலி என்றாலே பலரும் நாடுவது காபியைத் தான். அதிலும், ஒற்றைத் தலைவலிக்கு காபி அருந்துவது சிறந்த நிவாரணத்தை தர உதவும். வலியில் இருந்து மட்டுமின்றி உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரவும் காபி உதவும்.

தேன் (Honey) :


  • இருமல், தொண்டை புண் அல்லது வலி இருந்தால், தொண்டை புண்ணை ஆற்ற தேனைப் பயன்படுத்தலாம். மருத்துவ குணம் வாய்ந்த தேனுக்கு வைரஸ் மற்றும் தசை வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. வீக்கமடைந்த சளி சவ்வுகளை ஆற்றவும், இருமலின் அறிகுறிகளை போக்கவும் தேன் உதவுகிறது.

தக்காளி (Tomato):


  • தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.
  • தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

எலுமிச்சம்பழம் (Lemon) :


  • எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.
  • நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

கறிவேப்பிலை (Curry leaves):


  • பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.
  • கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும். இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

மிளகுக்கீரை (Mint) :


  • மிளகுக்கீரை என சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் புதினா நிறைய உடல் கோளாறுகளுக்கு பயன்படுகிறது. செரிமானக் கோளாறு எனப்படும் சீரண சக்தி இந்த மிளகுக்கீரையை வெறுமனே வாயில் போட்டு மென்று தின்றாலே உங்கள் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் இது சிறந்த மருந்து. வயிற்று வலி, வயிறு மந்தம், ஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் இந்த ஒன்றே சரி செய்கிறது.
  • மிளகுக்கீரை மட்டுமின்றி மிளகுக்கீரை எண்ணெய்யையும் வலியைக் குறைக்க பயன்படுத்தலாம். தசை வலிகள், தசைகளின் வீக்கம் மற்றும் காயத்தை சரி செய்ய வாரம் ஒருமுறை மிளகுக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

துளசி (Holy basil) :


  • துளசியில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன.அவை சளி, காய்ச்சல், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. துளசி இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது துளசியைக் கொதிக்கவைத்த தண்ணீரைக் குடிப்பது தொண்டை புண் மற்றும் சளி அறிகுறிகளைப் போக்க பயனுள்ளதாக இருக்கும்.
  • துளசி இலையின் நன்மைகள் சில புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் மற்றும் எச்.ஐ.வி செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.இதனால் உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!