சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா இதுல A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil

சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil
X
பாகற்காய் அல்லது பாகற்காய் இலையைப் போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால், அது தொற்றுகளைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும். இதுபோன்று இன்னும் சில பயன்களை இக்கட்டுரையில் காணலாம்.

பாகல் என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும் காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை (தாவர) வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.பாகற்காய் கைப்புச் (கசப்பு, கயப்பு) சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு. பாகற்காய், இரைப்பையில பூச்சிகளை கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதோட பழம் மற்றும் இலைகள்லயும்கூட நிறைய மருத்துவ குணம் இருக்கு.

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்| Benefits of Eating Bitter Gourd

1.இரண்டு மடங்கு வலிமை:

புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும். இது நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டலச் செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்குப் பொட்டாசியம் உதவும்.

2.இன்சுலின் சுரப்பு மேம்படும்:

இதில் சாரன்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது. ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை இது குறைக்கும். இதேபோல் பாலிபெப்டைடு பி என்ற இன்சுலின் பாகற்காயில் உள்ளது. இது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் மேம்பட உதவும்.

3.வைட்டமின் கலவை:

இது கலோரி குறைவான ஓர் உணவு. இதில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட் , சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.

4.குடற்புழுவுக்கு மருந்து:

இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கிக் குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளைக் கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும்.

5.விதைகளிலும் உண்டு பயன்கள்:

இதன் விதைகள் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும். புற்றுநோய், லூக்கீமியா, ரத்தசோகை போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.

6.தோல் நோய்களுக்கு மருந்து:

இதன் சாற்றை எலுமிச்சைச் சாற்றில் கலந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு தரும்.

7.முடியைப் பாதுகாக்கும்:

இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகுப் பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசிவர, முடிகொட்டுவது குறையும்.

8.எடை குறைப்புக்கு உதவும்:

பாகற்காயில் 80- 85% தண்ணீர் உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் கலோரியும் குறைவுதான். தண்ணீர் நமது பசியைக் போக்கும் என்பது நமக்குத் தெரியும். பாகற்காயைச் சாப்பிடுவதால் பசி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதனால் எடை குறையும்.

9.சுவாசப் பிரச்னைகளை நீக்கும்:

துளசி இலை, பாகற்காய் இலை இரண்டையும் ஒன்றாக்கி அரைத்து தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிடவேண்டும். இது ஆஸ்துமா, சளி, இருமலுக்கு நல்ல தீர்வாக அமையும்.

10.கல்லீரலுக்கு நல்லது:

பாகற்காய் அல்லது பாகற்காய் இலையைப் போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் குடித்தால், அது தொற்றுகளைத் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.

11.மலச்சிக்கலுக்கு மருந்து:

இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் மலச்சிக்கல் , அஜீரணம் போன்றவற்றை நீக்கும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!