ஒன்றா... இரண்டா...? சொல்ல அளவே இல்ல அவ்ளோ அதிசயம் இருக்கு நம்ம தூதுவளை இலைல..!

தூதுவளைச் சாறு வீக்கத்திற்கு எதிரான குணங்களைக் கொண்டுள்ளது. ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை மிகவும் முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது.அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது என்பதை காணலாம்.

தூதுவளை :

தூதுவளை என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது.இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு.இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது.

குறிப்பாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. இது சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. சளியை குணப்படுத்த தூதுவளையைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் தயார் செய்து அருந்தலாம். இது தவிர சூப், சட்னி, ரசம், துவையல் போன்ற பல்வேறு ரெசிபி வகைகளில் தூதுவளையைப் பயன்படுத்தலாம். இந்த மருத்துவ பண்புகள் நிறைந்த தூதுவளைச்செடி முட்கள் நிறைந்ததாக காணப்படும். இலைகளிலும் முட்கள் காணப்படலாம்.

தூதுவளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1.வீக்கத்தைக் குறைக்க:

தூதுவளைச் சாறு வீக்கத்திற்கு எதிரான குணங்களைக் கொண்டுள்ளது. எனவே உடலில் வீக்கம் ஏற்படும் போது தூதுவளையில் சூப் அல்லது ரசம் வைத்து அடிக்கடி சாப்பிடலாம். இவ்வாறு தூதுவளையை உட்கொள்ளும் போது அது அந்த வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

2.ஆஸ்துமா குணமாக:

ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை மிகவும் முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது. தூதுவளையைக் கொண்டு சூப் வைத்து அருந்துவது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்ததாக அமைகிறது. மேலும் இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

3.கொசுக்களை விரட்ட:

கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டுவதற்கு தூதுவளைச் சாறு உதவியாக அமையும். அதன் படி தூதுவளைச் சாற்றை நம் உடலில் தடவிக் கொள்வதன் மூலம் மலேரியாவை ஏற்படுத்தும் அனோஃபெலிஸ் கொசுக்களை விரட்டலாம். இது தவிர கொசுக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூதுவளையின் சாறை தெளிப்பதன் மூலம் கொசு முட்டையிடுவதைத் தடுக்கலாம். மேலும் அதன் அடர்த்தியைப் பொறுத்து கொசுக்களை அழிக்கலாம்.இதனால் காய்ச்சல் வருவதை தடுக்கலாம்.

4.ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்தது :

தூதுவளையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கிறது. தூதுவளையை எப்படி உட்கொண்டாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

5.புற்றுநோயைத் தடுக்க:

தூதுவளை புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட மூலிகையாகும். இதில் உள்ள வேதிப்பொருள்கள் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தூதுவளையை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை நீக்கி புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

6.நீரிழிவு நோய்க்கு எதிராக:

இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பண்புகளை தூதுவளை கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட இந்த தூதுவளை ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் தூதுவளை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அன்றாட உணவில் நீரிழிவு நோயாளிகள் தூதுவளையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தூதுவளையின் மருத்துவ குணங்கள்:

சளி மற்றும் இருமலைப் போக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சளி, இருமல் நோய்களைப் போக்க உதவக்கூடியதாக தூதுவளை அமைகிறது. இதனை ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். வழக்கமான ரசத்தில் இந்த தூதுவளை இலையை அரைத்து கலந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சளி, இருமலைப் போக்கலாம். இதன் மூலம் நெஞ்சு சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொற்று போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.உடலுக்கு மிகவும் நல்லது எனவே தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !