ஆயுள் முழுக்க இதய நோய் வராம இருக்க இந்த வகை வாழைப்பழம் ஒன்னு போதும் ..! எப்படி சாப்பிடணும் ?
வருடம் முழுவதும் எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். அவைகள் பூவன், பேயன், ஏலக்கி, பச்சை, செவ்வாழை, கற்பூரவல்லி, நேந்திரன் என்று பல வகைகளில் கிடைக்கும். வாழைப்பழத்தில் நேந்திரன் பழத்தின் நன்மைகள் என்ன, இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் என்ன, யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாழைப்பழங்களில் நேந்திரன் பழம் சிறந்த ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. கேரள நேந்திரன் பழம் என்பதை விட கேரளா நேந்திரன் சிப்ஸ் என்பது உலகளவில் பிரசித்திபெற்றது. அத்தியாவசியமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் கொண்டு இனிப்பு என்பதை தாண்டி ஆரோக்கியமான ஒன்றாக மாறியுள்ளன. ஒரு வேளை உணவை தவிர்த்து இந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும். வயிறு நிறைவாக இருக்கும். இத்தகைய நேந்திரன் பழத்தின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
நேந்திரன் வாழைப்பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
1.கலோரிகள்
2.கொழுப்பு
3.புரதம்
4.கார்போஹைட்ரேட்டுகள்
5.நார்ச்சத்து
6.பொட்டாசியம்
7.வைட்டமின் பி 6
8.வைட்டமின் சி
9.மாங்கனீசு
10.இரும்பு
செரிமானத்தை மேம்படுத்தும் நேந்திரன் வாழைப்பழம்
நேந்திரன் வாழைப்பழம் சுவையில் மிதமான இனிப்புடன் இருக்கும் ஒருவகை வாழைப்பழமாகும். இது செரிமானத்தை மேம்படுத்தும் தன்மையுடன், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இந்த பழம், சத்துக்களால் நிரம்பியதுடன், செரிமானக் குறைபாடுகள் மற்றும் குடல் பிரச்சனைகளை தீர்க்கும் இயற்கை வழிமுறையாக செயல்படுகிறது.நேந்திரன் வாழைப்பழத்தைப் பழமாகவே தினமும் உணவில் சேர்த்தால், உடலின் செரிமானம் மேம்படும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும். நேந்திரன் பழத்தில் நார்ச்சத்து அதிகம் என்பதால் இது செரிமானதை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நேந்திரன் பழம்
நேந்திரன் வாழைப்பழத்தில் மெக்னீசியம் (Magnesium) சத்து நன்றாக இருக்கிறது. மெக்னீசியம், இரத்தக் குழாய்களில் சுழற்சியை மேம்படுத்துவதுடன், இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இதயத்துக்கு தேவையான சுறுசுறுப்பு மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது.
நேந்திரன் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.இது உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் சோடியம் குறைவாக உள்ளது என்பதால் ஆரோக்கியமாகவே இரத்த அழுத்தத்தை பராமரிக்க செய்கிறது.
நேந்திரன் வாழைப்பழம் எடை இழப்புக்கு உதவும்
எடை குறைப்பதில் வாழைப்பழம் நேரடியாக உதவும் என்பதற்கு எந்த ஆதரவும் இல்லை. எனினும் வாழைப்பழங்களில் இருக்கும் பண்புகள் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவலாம். இவை ஒப்பீட்டளவில் குறைவான கலோரிகளை கொண்டுள்ளன. 100 கலோரிகளுக்கு மேல் சராசரியாக இருந்தாலும் இவை சத்தானவை. எடை குறைப்பதில் தகுந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும், எடை சீராகவும் இருக்கும். நேந்திரன் வாழைப்பழம், தக்க ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, எடை குறைப்பதற்கும் சிறந்ததாக செயல்படுகிறது.
நீரிழிவு மேலாண்மைக்கு நேந்திரன் பழம் உதவுமா?
நேந்திரன் வாழைப்பழம் இயற்கையாகவே அதிக சுவையை கொண்டுள்ள பழம். இது நீரிழிவு மேலாண்மைக்கு உதவும் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த பழம். இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள குறிப்பிட்ட சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகின்றன. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
நேந்திரன் வாழைப்பழம் நார்ச்சத்து அதிகமாக கொண்டுள்ளது, இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நார்ச்சத்து, உடலில் சர்க்கரையின் உறிஞ்சலை மெதுவாக்கி, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது. இது நீரிழிவுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நேந்திரன் வாழைப்பழம்
நேந்திரன் வாழைப்பழம் தனது தனித்துவமான சுவையும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு பழமாகக் கருதப்படுகிறது. இதனுடைய முக்கிய பண்புகளில் ஒன்று நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலின் இயற்கை பாதுகாப்பு முறை, இது வைரஸ்கள், பாக்டீரியா, மற்றும் நோய் ஏற்படுத்தக்கூடிய கிருமிகளின் தாக்குதல்களில் இருந்து உடலை பாதுகாக்கும்.
இது ஆன்டி -ஆக்சிடன்ட்கள் நிறைந்தது. இவற்றில் ஃப்ளவனாய்டுகள் மற்றும் அமின்கள் என சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற ஆதாரங்களை கொண்டுள்ளன. இந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் இதய நோய் மற்றும் மாகுலர் சிதைவு போன்றவை ஆரோக்கிய நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவும் நேந்திரன் வாழைப்பழம்
எலும்புகளை வலுப்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்து கல்சியம் ஆகும். நேந்திரன் வாழைப்பழத்தில் சிறிய அளவிலான கல்சியம் உள்ளது. கல்சியம், எலும்புகளின் அடுக்குகளை வலுப்படுத்தி, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால், எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க முடியும்.
மெக்னீசியம் பாஸ்பேட்டின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எலும்பு வளர்ச்சி மற்றும் கனிமமயமாக்கலை வலுவாக வைக்கும். போதுமான அளவு மெக்னீசியம் எடுப்பது எலும்பு தாது அடர்த்தி குறைய வழிவகுக்கும்.
குழந்தைகளுக்கு நேந்திரன் வாழைப்பழம் செய்யும் நன்மைகள்
குழந்தைகள் நேந்திரன் வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் குடல் பாக்டீரியா பராமரிக்கலாம். இது செரிமானத்துக்கு அவசியமான குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.குழந்தைக்கு ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க செய்கிறது. குழந்தைக்கு நேந்திரன் பழம் கொடுக்கும் போது அது புரோபயாடிக் பாக்டீரியாவை அதிகரிக்க செய்யலாம். இது குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாவாகும்.
கர்ப்பிணிகளுக்கு நேந்திரம் பழத்தின் நன்மைகள்
கர்ப்பகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களில் வாழைப்பழங்கள் முக்கியமானவை. இது ஆற்றல் நிறைந்த ஆதாரம் கொண்டவை. இவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கர்ப்பிணிகளுக்கு இரத்த சோகை வராமல் தடுக்கும். இது ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க உதவுகின்றன. இதில் இருக்கும் வைட்டமின் பி குழுமம் ஆனது கருவின் வளர்ச்சியை மேம்படுத்த செய்யும்.கர்ப்பகால நீரிழிவு நோய் இருந்தால் அவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து எடுக்க வேண்டும்.
நேந்திரன் வாழைப்பழத்தை எப்படி சாப்பிடலாம்?
1.பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது.
2.பழத்தை ஸ்மூத்தியாக அடித்து சாப்பிடலாம்.
3.குழந்தைக்கு பழத்தை மசித்து சாப்பிட கொடுக்கலாம்.
4.நேந்திரம் பழத்தை மசித்து இனிப்பு ஆப்பம் செய்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
5.நேந்திரம் பழம் சிப்ஸ் ஆக கிடைத்தாலும் அதிகம் சாப்பிடக்கூடாது. எண்ணெயில் பொரித்து எடுப்பதால் மிதமாக எடுப்பது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu