வாரத்தில் ஒரு முறை இந்த சூப் குடிங்க..! உடம்பில் உள்ள நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்..!

வாரத்தில் ஒரு முறை  இந்த  சூப் குடிங்க..!  உடம்பில் உள்ள நோய்கள் பஞ்சாய் பறந்துவிடும்..!
X
வாத நோய்கள் , மலச்சிக்கல் , தோல் நோய்கள் , மூல நோய் , .மாதவிடாய் பிரச்சனைகள் போன்ற அனைத்திற்கும் சிறந்த தீர்வாக காண உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடக்கொத்தான் (Mudakathan Keerai benefits in tamil) அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் எனப் பெயர். காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை. தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை என்ற பெயரில் செய்வார்கள்.

இந்த கீரை உடலுக்கு மிகவும் நல்லது.இந்த கீரையை வேகவைத்து சமைத்து சாப்பிடுவர், சூப் ஆகவும் குடிப்பர்.இதை பாட்டி வைத்தியத்திலும் பயன்படுத்துவர்.மருத்துவ குணம் வாய்ந்தது.

முடக்கத்தான் கீரையின் பலன்கள் | Mudakathan Keerai benefits in tamil

1.வாத நோய்கள்:

பொதுவாக வாத நோய்கள் அதிகமாக குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் இருக்குன்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த முடக்கத்தான் கீரை வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கும்.

2.மலச்சிக்கல்:

முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.

3.தோல் நோய்கள்:

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பற்று வச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும்.

4.மூல நோய்:

மலச்சிக்கல்னால மூல வியாதி வந்தவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தா, மூல நோய் விரைவில் குணமாகும்.

5.காது வலி:

காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சாறெடுத்து அதில் சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.

6.மாதவிடாய் பிரச்சனைகள்:

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுகிறது.

7.குழந்தை பெற்ற பெண்களுக்கு:

இந்த முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

8.மூட்டு வலி:

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் வாதத் தன்மை கட்டுப்பட்டு மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.

9.தலைவலி:

தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நன்றாக கசக்கி வெந்நீரில் போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும்.

10.பொடுகு தொல்லை:

பொடுகுத் தொல்லை இருந்தால் முடக்கத்தான் இலைகள் சேர்த்து செய்த எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.எனவே இதை வாரம் ஒரு முறை சூப் செய்து குடித்தால் உடலுக்கு நல்லது.


முடக்கத்தான் கீரை சூப் செய்முறை | how to make mudakathan keerai soup in tamil

1. முடக்கத்தான் கீரையை நன்கு சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவி, வடிகட்டி வைக்கவும்.

2. பூண்டு பல்லை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து காயவைத்து, அதில் பூண்டு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

4.தாளித்த பிறகு சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

5. கீரை மெலிந்து வரும் வரை ஒரு சில நிமிடங்கள் வைக்கவும்.

6.அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.

7.பருப்பை முந்தையதாக வேகவைத்து சேர்த்தால், சூப்புக்கு செரிமான சக்தி அதிகரிக்கும்.

8.சூப் நன்றாகக் கொதித்தவுடன் அடுப்பை அணைத்து வடிகட்டவும்.

9.சூட்டான சூப்புடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்து பரிமாறுங்கள்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!