குடல் சுத்தமாக பானங்களா ?.. அடடே ...! இனி இத காலை , இரவுனு ரெண்டு வேளை குடிச்சாலே போதும்... !
குடலை சுத்தம் செய்து ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான சில பானங்கள் மட்டுமே போதும். இதுவே நமது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் .அந்த பானங்கள் என்ன, அவை எப்படி குடலை சுத்தம் செய்கின்றன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குடல் ஆரோக்கியம் தான் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் அடிப்படை. அதனால் குடலை எப்போதும் டீடாக்ஸ் செய்து கழிவுகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு காலங்காலமாக நிறைய வீட்டு வைத்தியங்கள் பின்பற்றப்படுகின்றன. பேதிக்கு எடுக்க முடியாதவர்கள் இந்த கீழ்வரும் பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் எளிமையாக குடலை சுத்தம் செய்து கொள்ள முடியும்.
குடல் பிரச்சனைகள் வர காரணம்
குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் குடல் உடலின் செரிமான மற்றும் நீக்குவிடை அமைப்பின் முக்கிய பகுதியாகும். குடலில் பிரச்சனைகள் ஏற்படும்போது, அது ஒருவரின் உடல் நலனையும், வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கக்கூடும். குடல் பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன . அவற்றில் சில காரணங்கள் ,
1.தவறான உணவுப் பழக்கங்கள்
2.பரேசப்பட்ட உணவு மற்றும் ஜங்க் உணவுகள்
3.நீர் குடிக்கும் பழக்கம் குறைவு
4.நெருக்கடியான வாழ்க்கை முறை (Stress)
5.நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது
6.போதிய தூக்கமின்மை, போதிய உடற்பயிற்சியின்மை, ஜீரணக் கோளாறுகள், இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பது.
உள்ளிட்ட பல காரணங்களால் குடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகின்றன.
மோர்
குடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிக அற்புதமான பானம் ஆகும். வயிற்றில் ஏற்படும் அசௌகரியங்களைச் சரிசெய்து, ஜீரணத்திற்கு உதவி செய்யும் நல்ல பாக்டீாியாக்களை உற்பத்தி செய்வதில் ப்ரோ பயோடிக் உணவுகளுக்கு முக்கிய இடமுண்டு. அத்தகைய ப்ரோ - பயாடிக் பானங்களில் ஒன்றான மோரை காலை வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவக்கு முன்பாக குடித்து வர குடல் பா்க்டீரியாக்கள் தூண்டப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படும்.
மோர், உடலில் குளிர்ச்சி தரும் தன்மையை உடையது. இது கோடைகாலங்களில் அல்லது வெப்பமான நாட்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.
ஹெர்பல் டீ வகைகள்
புதினா டீ, இஞ்சி டீ, கெமோமில் டீ வகைகள் குடலில் உள்ள கழிவுகளை வெளியுற்றி, ஜீரண ஆற்றலை தூண்டும் தன்மை கொண்டவை. குறிப்பாக புதினா மற்றும் கெமோமில் டீ மனநல ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
புதினா கொத்தமல்லி சாறு
புதினா மற்றும் கொத்தமல்லி ஆகிய இரண்டு மூலிகைகள், இந்திய உணவுகளில் பிரபலமாக உள்ளவை. இவை சுவை மற்றும் வாசனை மட்டுமல்லாது, உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இவற்றை சேர்த்து தயாரிக்கப்படும் சாறு, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை ஃபிரஷ்ஷாக அரைத்து வடிகட்டி அதோடு துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர குடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த பானம் குடல் கழிவுகளை வெளியேற்றுவதோடு கல்லீரலின் செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்யும்.
செம்பருத்தி டீ
செம்பருத்தி ஒரு மருத்துவ மூலிகையாக பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. செம்பருத்தி மலரின் இனிய ருசியுடன் கூடிய தேநீர், சுகாதார நன்மைகளால் பிரபலமாக உள்ளது. செம்பருத்தி டீயில் உலர்ந்த செம்பருத்தி மலர் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இலகுவான, சுவையானதாகவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளையும் கொண்டது.
செம்பருத்தி இதய ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நமக்குத் தெரியும். ஆனால் இந்த செம்பருத்தி குடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.செம்பருத்தி பூவை டீயாக செய்து குடித்து வர குடல் ஆரோக்கியம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சீரக டீ
சீரகம் ஒரு பருத்தி மூலிகையாகவும், பல உணவுகளுக்கு வாசனை மற்றும் சுவை தரும் ஒரு நல்ல உணவாகவும் விளங்குகிறது. இது இந்திய, மத்திய கிழக்கு, மற்றும் மெக்சிகோ போன்ற இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது, மேலும் இதனுடைய டீயும் அதற்கான ஒரு அருமையான வழியாகும்.
சீரகம் என்றாலே அது குடலை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.அகத்தை சீராக வைத்திருக்க உதவி செய்வதால் தான் அதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. சீரகத்தை டீயாகவோ அல்லது குடிக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தோ குடித்து வர ஜீரணத்தை அதிகரிப்பதோடு உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu