வயிறு தொடர்பான அனைத்து கோளாறுகளையும் ஓட ஓட விரட்டும் மணத்தக்காளிக் கீரை...! வாங்க இன்னும் தெரிஞ்சிக்கலாம்...!
தக்காளி தெரியும் அதென்ன மணத்தக்காளி (Lettuce) அத சாப்பிட்டால் வாய்ப்புண், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனையும் தீரும்.இந்த மணத்தக்காளியை " மணித்தக்காளி " என்றும் அழைப்பர். இது " சொலனேஸி" குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். தமிழ்நாட்டில் இதை சுக்குட்டி கீரை அப்டினு சொல்லுவாங்கள். நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்பதால் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். உடலுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களையும் ஆற்றலையும் கொடுப்பது நாம் உண்ணும் உணவு என்பதால் நமது உணவு பழக்கங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் கீரை மணத்தக்காளி கீரை(Lettuce).இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது.இதனால் வயிற்று புண் சரி ஆகிவிடும். மணத்தக்காளி கீரை,பழம் ஆகியவற்றை பொரியல், குழம்பு செய்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும்.இந்த கீரை பாட்டி வைத்தியமாகவும் உள்ளது. | Manathakkali keerai benefits in tamil
மணத்தக்காளி கீரை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் / Benefits of Eating Manathakkali Keerai
1.புண்களை போக்கும் மணத்தக்காளி:
வாய்ப்புண் இருந்தால் மணத்தக்காளி இலையைப் பிழிந்து சாறு எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் மறையும். வாய்க் கொப்பளிக்கவும் மணத்தக்காளி நீரைப் பயன்படுத்தலாம்.இதனால் வாய்ப்புண் சரியாகும்.
2.மணத்தக்காளி கூட்டு:
மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவற்றை நீக்கும் இந்த கூட்டு சுவையானது. மணத்தக்காளி கீரையுடன் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடல் சூடு தொடர்பான நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு. மணத்தக்காளியை கீரையாகப் பயன்படுத்தி வந்தால் சளி, இருமல் போன்ற நோய்களும் விலகும்.இதனை வாரத்தில் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட வேண்டும்.
3.வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும்:
மணத்தக்காளி பழங்களை நன்றாக உலர வைத்து வற்றலாகவும் பயன்படுத்தலாம். நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணத்தக்காளி வற்றல் சிறந்த மருந்து. காய்ச்சல் காரணமாக நாவில் ஏற்படும் கசப்பு மற்றும் வேறு காரணங்களால் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாகவும் மணத்தக்காளி வற்றலைப் பயன்படுத்தலாம்.உடலுக்கு ஆரோக்கியமானது.
4.பசியைத் தூண்டும் கீரை:
நோய் வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டாலும் அதைப் போக்கும் வல்லமையும் மணத்தக்காளிக்கு உண்டு. தாகத்தை தணிக்க மணத்தக்காளி பழம்(Honeysuckle fruit) உதவும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கவும், மலத்தை இளக்கவும், பசியைத் தூண்டவும் மணத்தக்காளி பழத்தைப் பயன்படுத்தலாம்.
5.காசநோய் குணமாக்கும்:
மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட முடியவில்லை என்றாலும் வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிட்டால் காசநோய் உள்ளவர்களுக்கு மணத்தக்காளி பழத்தை குடுத்தால் சரி ஆகிவிடும்.
6.கருக்கு நல்லது :
திருமணமான புது தம்பதிகளுக்கு விரைவில் கருத்தரிக்க செய்ய இதை சாப்பிட்டால் கரு வலிமை பெற்று பெண்களின் கருப்பை வலிமையாக இருக்கும்.ஆகையால் இதை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.
7.மஞ்சள் காமாலை சரி செய்யும் :
கீழாநெல்லி மட்டும் அல்ல மணத்தக்காளி கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் மஞ்சள் காமாலையை சரி செய்யும் சத்து இதற்கு உண்டு.மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்.
8.சரும பிரச்சனை சரி செய்யும் | Corrects skin problems
மணத்தக்காளி கீரையின் சாற்றை உடம்பில் தடவினால் தோல் சம்பந்தமான நோய்கள் சரி ஆகும்.வாரத்தில் 2 முறை உடலில் தேய்க்கலாம்.
9. இதயத்துக்கு நல்லது :
இதை சாப்பிட்டால் இதயம் வலிமையையாக இருக்கும்.இதயப் பிரச்சனை சரி செய்யும்.நெஞ்சுவலியையும் குணமாக்கும் தன்மை இந்த கீரைக்கு உள்ளது.இதை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் களைப்பு நீங்கும் தூக்கம் நன்றாக வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu