காது சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துறீங்களா..? அச்சச்சோ உடனே இத தெரிஞ்சிக்கோங்க...! | Is it safe to use earbuds to clean ears in Tamil

காது சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துறீங்களா..? அச்சச்சோ உடனே இத தெரிஞ்சிக்கோங்க...! | Is it safe to use earbuds to clean ears in Tamil
X
காதில் இயர் பட்ஸ் போடும் போது, அது நமக்கு ஒரு அதிர்ச்சி போன்றது. இதன் காரணமாக நம் காதுகளில் வெட்டுக்கள் ஏற்படலாம். மேலும், இயர்பட்ஸ்கள் செவிப்பறைக்கு பாதுகாப்பானவை அல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் காதுகளையும் சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப் பயன்படுத்தக்கூடாது.இதனால் காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.காது சுத்தம் செய்ய என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்.

காதுகளைச் சுத்தப்படுத்துவது என்பது நம்மில் பலரும் அன்றாடம் செய்யும் ஒன்றாகும். சிலர் காலையில் குளித்த உடனே காதுகளைச் சுத்தப்படுத்த பட்ஸைத் தேடுவார்கள். இன்னும் சிலர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் காதுகளைக் குடைந்து கொண்டிருப்பார்கள். மலைகளின் இடுக்கில் பாறைகளைக் குடைவது போல காதுகளுக்குள் பட்ஸை நுழைப்பதால் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை நாம் உணர்வதே இல்லை. உண்மையில் பெரிய ஆபத்து காத்திருக்கிறது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

ஐம்புலன்களில் ஒன்றானது காது. இது நம் உடலின் முக்கிய உறுப்பாகும்.செவிகளால் உணரப்படும் ஒலி நமது சுற்றுப்புறத்தைக் குறித்த தகவல்களை நமக்கு அளிக்கிறது. நாம் அதனுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. நாம் கீழே விழாமல் நிமிர்ந்த நிலையில் நிற்பதற்கு தேவையான சமநிலையை காதுகள் நமக்கு அளிக்கின்றன.

ஆகையால் நமது காதுகளை சுத்தமாவும் அழகாவும் பார்த்து கொள்ள வேண்டியது நம் கடைமையாகும் .பெண்கள் & ஆண்கள் என இருவருமே காதில் அணியும் அணிகலன்களில் காட்டும் ஆர்வத்தை அதனை சுத்தம் செய்வதில் ஆர்வம் கட்ட வேண்டும்.ஆனால் சிலர் காதை சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்துகின்றனர்.இது சுத்தம் செய்தாலும் சில பக்க விளைவை ஏற்படுத்தும்.

இயர்பட்ஸ்களால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டுமா | Should you clean your ears with ear buds

காதில் இயர் பட்ஸ் ( Earbuds ) போடும் போது, அது நமக்கு ஒரு அதிர்ச்சி போன்றது. இதன் காரணமாக நம் காதுகளில் வெட்டுக்கள் ஏற்படலாம். மேலும், இயர்பட்ஸ்கள்( Earbuds ) செவிப்பறைக்கு பாதுகாப்பானவை அல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் காதுகளையும் சுத்தம் செய்ய இயர்பட்ஸ்களைப்( Earbuds ) பயன்படுத்தக்கூடாது.இதனால் காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காதை சுத்தம் செய்ய இயர்பட்ஸ் பயன்படுத்தாமல் மாற்று வழி உள்ளதா | Is there an alternative to using ear buds for cleaning ears

1.பேபி ஆயில் பயன்படுத்தவும்:

காது சுத்தம் செய்ய பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். இது காதுகளை எளிதாக சுத்தம் செய்கிறது. காதில் 2-3 சொட்டு எண்ணெய் வைத்து, சுத்தமான துணியால் காதை சுத்தம் செய்தால் போதும்.இதனால் செவித்திறன் பாதிப்பு குறையாது.

2.குளிக்கும்போது சுத்தம்:

நீங்கள் தினமும் குளிக்கும்போதும் காதை சுத்தம் செய்தால் போதும். வேறு எதையும் பயன்படுத்த வேண்டியதில்லை.

3.வெதுவெதுப்பான நீர்:

சுத்தமான துணியில் வெதுவெதுப்பான நீரை மெதுவாக நனைத்து, காதை மென்மையாகப் துடைக்கலாம். இது வெளியேறிய மெழுகை சுத்தம் செய்ய உதவும்.

4.மருத்துவ நிபுணரிடம் செல்வது:

தானாக முயற்சிக்காமல், மருத்துவரிடம் சென்று காதில் உள்ள மெழுகு அல்லது அழுக்கு பிரச்சினைகளை நீக்குவதே மிகவும் பாதுகாப்பானது. இதனால் காது கேளாமை ஏற்படாது.

எச்சரிக்கை:

கம்பிகள், பின்கள், மற்றும் வேறுபட்ட கருவிகளை பயன்படுத்துவது ஆபத்தானது. இது காது பாதை அல்லது காது செவியை காயப்படுத்தக் கூடும்.காது சுத்தம் செய்வதில் கவனம் தேவை, ஏனெனில் தப்பான முறைகள் பயன்படுத்தினால் கேட்புத்திறனை பாதிக்கலாம்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!