அடிக்கடி வரும் பல் வலி? பல்லு மஞ்சளா இருக்கா? அச்சச்சோ... அடுத்தது இதுதான்..! உஷாரா இருங்க! | how to reduce teeth yellowing in Tamil
பற்கள்( Teeth ) பார்க்கவே அழகாக வரிசையாக இருக்கும் . அதும் குழந்தை பற்கள் அவ்வளவு அழகாக இருக்கும். சிரிக்க , சாப்பிட பல் வேணும். பல் இருந்தா தான் சாப்பிட முடியும். இப்ப போற வேகத்துல நம்பள நாமே கேர் பண்ணாம போயிட்டு இருக்கும். அதில் பல்லு ஒன்று ஆகும். பல்லு விழுந்தா வளரும் பருவம் இருக்கு. ஆனால் பல் வளரும் பருவம் போய் விழுந்தால் பல் செட் யூஸ் பண்ணறாக. அதுக்கு கவலை இல்லை.
ஆனால் பல்லில் மஞ்சள் கறை வருவதால் அதை எப்படி சரி செய்வது ( how to reduce teeth yellowing in Tamil ) என தெரியவில்லை. ஒரு சிலருக்கு 18 வயதுக்கு மேல் பற்கள் வளர்ந்தால் ஞானப்பல் என்று அழைப்பர். நாம் சிரிக்கும் போது பல்லில்( Teeth ) ஏதோ பார்ப்பதற்கு ஒரு மாரி இருந்தால் நம்மிடம் நெருங்க மாட்டார்கள். எனவே நம் பற்களை நாம் தன சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இருமுறை . மஞ்சள் கரைக்கு பயம் வேண்டாம் அதற்கான வழிகள் பார்ப்போம்.
பற்களின் வகைகள் :
1.வெட்டுப்பல்
2.கோரைப்பல்
3.முன்கடைப்பல்
4.கடைப்பல்
பற்களின் எண்ணிக்கை :
மனிதர்களுக்கு 8 வெட்டுப்பற்கள், 4 கோரைப்பற்கள்; 8 முன்கடைப்பற்கள்; 12 கடைப்பற்கள் என மொத்தமாக பற்களின்( Teeth ) எண்ணிக்கை 32. ஆனால் சிலருக்கு இதனை விடக் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இது போன்ற எண்ணிக்கை மாற்றங்கள் ஏதேனும் காரணமாக இருக்கலாம். அனைவருக்கும் இது போல இருக்காது.
பற்களில் மஞ்சள் நிறம் காரணம் என்ன | What is the cause of yellowing of teeth
1. ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகளை கடைபிடித்தல். அதாவது புகைப்படித்தல், மது அருந்ததுதல்.
2. காஃபி மற்றும் கார்ப் அடங்கிய உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்.
3. தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷை பயன்படுத்துவதால் பற்களின் மீது இருக்கும் எனாமலில் ஏற்படும் சேதம்.
4. ப்ளூரைடு நிறைந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்துதல்.
5. உடல் பிரச்சனைகளால் அதிகப்படியான மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்.
6. வயதான பற்கள்( Teeth ) நாட்கள் செல்லும்போது அதன் பொலிவை இழத்தல் போன்ற காரணங்களால் பற்கள்( Teeth ) மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன.
எவ்வாறு சரி செய்வது மஞ்சள் கறையை | how to reduce teeth yellowing in Tamil
எலுமிச்சம் பழம்:
கறைகளை நீக்குவதில் எலுமிச்சைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் எலுமிச்சையை அதிகமாக பயன்படுத்த கூடாது.. எலுமிச்சம் பழ சாறு + பேக்கிங் சோடா இரண்டையும் நீரில் கலந்து ஒரு சுத்தமான பஞ்சு எடுத்து இதில் தொட்டு பற்களை துலக்கி வந்தால்கறைகள் நீங்கிவிடும். பேக்கிங் சோடா, கற்றாழை ஜெல், கிளிசரின், எலுமிச்சை கலந்து பற்களை ( Teeth ) பிரஷ்ஷால் தேய்த்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கும்.
பல் துலக்குதல்:
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது துலக்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். 2 முதல் 3 நிமிடங்களில் பற்களை துலக்கலாம். அப்போது வாயின் அனைத்து பகுதிகளையும், நாக்கையும் முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். அவற்றின் மீது படிந்திருக்கும் அழுக்குகளும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு காரணமாக இருக்கின்றன. மேலும், பற்களை துலக்கும்போது அதிக அழுத்தம் கொடுத்து துலக்கக் கூடாது. தடிமனான நரம்புகளை உடைய பிரஷ்ஷையும் பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்களின்( Teeth ) ஆரோக்கியத்துக்கு சிறந்தது.இதனால் மஞ்சள் கறை வராது .
ஆரோக்கியமான உணவுமுறை:
வைட்டமின் சி, ஃபைபர், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். இது உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் ஒட்டுமொத்த உடலையும் பராமரிக்க உதவும். பெர்ரி, காபி, பீட்ரூட் போன்ற உணவுகளைத் தவிர்க்கவும் அவை பற்களில்( Teeth ) நிறமாற்றத்தை ஏற்படுத்தும்.
கரி:
பல்துலக்குவதற்கு பயன்படுத்தும் பற்பசைகளை சரியாக தேர்தெடுக்க வேண்டும். உங்களின் பற்களின் தன்மைக்கு ஏற்ப பற்பசைகளை உபயோகித்தால் தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். பற்பசை நிறுவனங்கள் பற்பசை கரியை கேப்சூல்களாக விற்பனை செய்கின்றன. பற்களில்( Teeth ) இருக்கும் மஞ்சள் நிறத்தை போக்குவதற்காக விற்பனை செய்யப்படும் அவற்றை வாங்கி பற்களை( Teeth ) வெண்மையாக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu