உங்க குழந்தைங்க தினமும் காய் & கீரைகள் சாப்பிடணுமா...? இப்படி பண்ணுங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...!
பச்சை காய்கறிகள் என்பது நம் அன்றாட வாழ்வில் சேர்க்க கூடிய ஒரு சத்தான உணவாகும்.இதை தினந்தோறும் எடுத்து உட்கொண்டால் கார்போஹைட்ரேட்,புரோட்டின் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.இதனால் உடல் சுறுசுறுப்பாகும் அனைத்து செயல்களிலும் ஆர்வமாக ஈடுபடலாம்.ஒரு நிலையான முடிவு எடுக்க முடியும்.இதற்கு காரணம் பச்சை காய்கறியின் சத்துக்களே ஆகும்.அதை நம் உணவில் எவ்வாறு எடுப்போம் என்பதை அறியலாம்.பச்சை காய்கறிகள், கீரைகளை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவை உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை. எனவே அவை சேர்த்து செய்யப்படும் சில எளிமையான உணவுகளை நாங்கள் உங்களுக்கு கொடுத்துள்ளோம். அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுங்கள்.
ஸ்மூத்திகள் :
ஸ்மூத்தி என்பது அரைத்த காய்கறி பழகலவை ஆகும் இதனுடன் இயற்கை இனிப்பூட்டிகளான தேன், பேரிச்சை, ஸ்டீவியா உடன் பால் அல்லது தயிர் மற்றும் உலர்விதைகள், உலர் தானியங்கள் சேர்த்து பருகும் பானம்.இதில் நட்ஸ் சேர்த்தும் பருகலாம் உடலுக்கு நல்லது.முகமும் பொலிவூட்டும்.
பச்சை காய்கறிகள் :
பச்சை காய்கறிகளை உங்கள் உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளும் வழி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை காய்கறிகளை பயன்படுத்தி நீங்கள் சாலட் செய்யலாம். இதை நீங்கள் பிரட் டோஸ்ட் அல்லது ஆம்லேட்டுடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். இல்லாவிட்டால் முட்டையை சேர்த்து அதில் காய்கறிகளை சேர்த்து ஆம்லேட் செய்யலாம். இது சிறந்த காலை உணவு. உங்களுக்கு நாள் முழுமைக்கும் தேவையான சக்தி கொடுக்கிறது.உடலுக்கும் ஆரோக்கியமான உணவு ஆகும்.
சுவையான ரேப்களை தயார் செய்யலாம் :
பேக் செய்யப்பட்ட சிக்கன், மீன், விருப்பமான காய்கறிகள், லெட்யூஸ், செய்யலாம் காலே (பரட்டைக்கீரை) போன்ற கீரைகளின் சாஸ்களை சேர்த்து ரொட்டியில் வைத்து ஒரு நல்ல ரேப்களை தயார் செய்துகொள்ளுங்கள்.இதுவும் கூட எடுத்து கொள்ளலாம் .
இன்ப்ஃயூஸ்ட் வாட்டர் குடியுங்கள்:
இது பச்சைக்காய்கறிகள், கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள எளிமையான வழி. ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து அதில் உங்களுக்கு பிடித்த மூலிகைகளை கலந்துவிடவேண்டும். புதினா, துளசி, ரோஸ்மேரி, வெள்ளரி, எலுமிச்சை என அனைத்தையும் அந்த தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் எடுத்து பருகினால் நன்றாக இருக்கும்.
மதிய உணவில் சேர்க்க வேண்டியவை:
பச்சை காய்கறிகள் உங்களுக்கு பிடிக்காது என்றால், உங்கள் முக்கிய உணவில் குயினோவா, சாதம், பாஸ்தாவில் சேர்த்து சாப்பிட்டால் இதன் மூலம் நம் உடல் நலமாக இருக்கும்.
மாலை சிற்றுண்டியில் சேர்க்கலாம் :
காய்கறிகள், கீரைகளை முக்கிய உணவுகளுடன் மட்டும்தான் சாப்பிட முடியுமா இல்லை கீரைகளை அலசி காயவைத்து ஏர் ஃப்ரை அல்லது பேக் செய்யுங்கள். அதில் கூடுதலாக விர்ஜின் ஆலிவ் எண்ணெயை சேருங்கள். உங்களுக்கு பிடித்த சீசனிங்குகளை தூவி இறக்கினால் அவை சுவையான மாலை நேர சிற்றுண்டியாக மாறிவிடும்.உடலும் வழு பெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu