முளைகட்டிய பச்சைப்பயறு ஆபத்தானதா..? உண்மை என்ன...?

முளைகட்டிய பச்சைப்பயறு  ஆபத்தானதா..? உண்மை என்ன...?
X
பச்சைப்பயிரின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன , அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம் .

முளைகட்டிய பயறு (Sprouted lentils) என்பது முளைக்க வைக்கப்பட்ட நிலையிலுள்ள பயரினை குறிக்கிறது. இது ஓர் உணவாகும். ஏதாவது ஒரு பயறு வகையினை முளைக்கவைத்து அதனை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ உண்ணப்படுகிறது. அதிக அளவு புரதச்சத்துக்கள் நிறைந்த இது கிழக்காசிய நாடுகளில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. | Green gram benefits in tamil

செய்முறை :

1. பச்சை பயரை நூறு கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும் அதனை நன்றாக நான்கு முறை கழுவி சுத்தம் செய்து குறைந்தபட்சம் இருபது மணி நேரம் ஊற வைக்கவும்.

2.அதன்பின் நீரை வடித்துவிட்டு ஒரு காடா துணியில் பச்சை பயிரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

3.துணியின் நான்கு மூலைகளையும் எதிரெதிர் புறத்தில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இதனை 12 மணி நேரம் கழித்து எடுக்கவும். பயிறு நன்றாக முளைகட்டி வந்திருக்கும்.

4.இதனை சமைக்காமல் மாதுளம் பழம் சேர்த்து சாப்பிடலாம் அல்லது உப்பு மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம் உடலுக்கு நல்லது.

முளைகட்டிய பச்சைப்பயரின் நன்மைகள் | Benefits of sprouted green gram

1. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் :

நீரிழிவு (diabetes) நோயாளிகளுக்கு அவர்களின் ரத்த சர்க்கரையை சிறப்பாக கட்டுப்படுத்த உதவும். இது தொடர்பான ஆய்வில் ரா ஸ்ப்ரவுட்ஸ் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கலாம். எனவே இது சர்க்கரைகளை சரியாக உடைத்து ஜீரணிக்க உடலை பயன்படுத்த செய்கிறது.

2. செரிமான மேம்பாடு :

பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகள் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவக் கூடும். பச்சையாக எடுத்துக் கொள்ளப்படும் ஸ்ப்ரவுட்ஸ்களில் குறைவான ஆன்டி-நியூட்ரியன்ட்ஸ் உள்ளன. இது செரிமான செயல்முறையின் போது தாதுக்களை உறிஞ்சுவதை உடல் திறம்பட செய்ய உதவுகிறது.

3.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன :

தினசரி உணவில் சமைக்காத முளைகட்டிய பயறு வகைகளை சேர்த்து கொள்வது நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகளை அளிக்கும். இப்பழக்கம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படும் HDL-ஐ அதிகரிப்பதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது என்பதை பல ஆய்வுகள் எடுத்து காட்டியுள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ரா ஸ்ப்ரவுட்ஸ், கெட்ட கொலஸ்ட்ரால், மொத்த கொழுப்பு மற்றும் பிளட் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தீமைகள் | Disadvantages

ரா ஸ்ப்ரவுட்ஸ்களை உண்பதால் ஏற்பட கூடிய முக்கிய அபாயம் ஃபுட் பாய்சனிங் ஆகும். ஏனென்றால் பச்சையாக உட்கொள்ளப்படும் முளைகட்டிய பயறு வகைகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். மேலும் இவை உணவுகளால் பரவும் நோயை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். விதைகள் ஈரப்பதமான நிலையில் முளைப்பதால் பாக்டீரியாக்கள் மட்டுமின்றி கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் வாய்ப்புகளும் அதிகம்.

எனவே பயறுகளை முளைகட்டிய பின் அப்படியே சாப்பிடாமல் நன்கு வேகவைத்து சாப்பிடுவது நோய்வாய்ப்படாமல் பாதுகாக்க உதவலாம். பல ஆய்வுகளின்படி பெரும்பாலான ஆரோக்கியமான மக்களுக்கு, பச்சையாக அல்லது லேசாக சமைத்த வேக வைத்த ஸ்ப்ரவுட்ஸ்களை சாப்பிடுவதால் நன்மைகள் கிடைப்பதை விட அபாயங்கள் சற்று அதிகம் இருக்கும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அபாயங்களும் உண்டு. ஸ்ப்ரவுட்ஸ் தவறான முறையில் வளர்க்கப்பட்டால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Tags

Next Story
சிக்கன் , மட்டன் எதுக்கு...? கால் கிலோ சுண்டல் போதுமே..! அந்த ரகசியம் தெரியுமா...?