வாரத்தில் ஒரு கொத்து திராட்சை போதும்.. அடுத்த சில நாட்களில் அதற்கான ரிசல்ட் பாப்பீங்க..! | Grapes benefits in Tamil

வாரத்தில் ஒரு கொத்து திராட்சை போதும்.. அடுத்த சில நாட்களில் அதற்கான ரிசல்ட் பாப்பீங்க..! | Grapes benefits in Tamil
X
திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துக்கள் உதவியாக இருக்கின்றன.

திராட்சை யாருக்கு தான் புடிக்காம போகுது. திராட்சையில் அதிகம் விரும்பி சாப்பிடுவது கருப்பு , பன்னீர் திராட்சை தான். சாப்பிட்டால் மறுக்கா சப்பிட்டே இருக்க தோணும். இது நீர் சத்து அதிகம் உள்ளது.அது பார்க்கவே கண்ணை கவரும் குண்டு குண்டா காய்ச்சு தொங்கும்.பார்க்கவே அழகா இருக்கு சாப்பிட்டால் அவ்வளவு நல்லது உங்க உடம்புக்கு . அதன் நன்மைகளை பார்க்கலாமா..?

திராட்சை (Grapes benefits in Tamil) என்பது திராட்சை பேரினத்திலுள்ள இனங்களில் ஒன்றாகும். இது மெராக்கோ, வட போர்த்துக்கல் முதல் தென் செருமனி மற்றும் கிழக்கில் வட ஈரான் ஆகிய உட்பட்ட மத்தியதரைப் பகுதி, மத்திய ஐரோப்பா, தென்மேல் ஆசியா இடங்களை தாயகமாகக் கொண்டது.தற்போது 5000 முதல் 10,000 வரையான இவ்வினத் திராட்சை வகைகள் உள்ளன. அவற்றில் சில வைன் உற்பத்திக்காக வாணிப முக்கியத்துவம் பெறுகின்றன.

சிட்ரஸ் குடும்ப வகையைச் சேர்ந்த பழங்கள் புளிப்புச் சுவை கொண்டவை. உதாரணத்திற்கு எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளி போன்ற பழங்கள் இந்த குடும்ப வகையைச் சேர்ந்தவை. திராட்சையும் கூட சிட்ரஸ் வகை பழம்தான். ஆனால், இதில் சிறிய மாற்றம் என்னவென்றால் மற்ற சிட்ரஸ் பழங்களைப் போல மிகுதியான புளிப்புச் சுவையை கொண்டிருக்காமல் சரிபாதிக்கு மேல் திராட்சையில் இனிப்புச் சுவை நிரம்பியிருக்கும்.

பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, சிவப்பு திராட்சை என பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் சுவை சிறிய அளவில் மாறுபடும். இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஆப்பிள், மாதுளையைப் போல காஸ்ட்லி பழம் அல்ல திராட்சை. கொஞ்சம் நியாயமான விலையில் கிடைக்கக் கூடியது.

திராட்சை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் | Grapes benefits in Tamil

  • திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துக்கள் உதவியாக இருக்கின்றன.
  • வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.
  • உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம்.
  • வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நம் தாகம் அடங்காது. அத்தகைய சூழலில் இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டால் நம் தாகம் கட்டுக்குள் வரும்.
  • வெயிலின் கொடுமையினால் நம் சருமம் பாதிக்கப்படுவது குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள விட்டமின் சி சத்து நமது சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.
  • பசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் திராட்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரத்திற்கு பசியை தாங்கும் சக்தியை கொடுக்கும். ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்பினால் திராட்சைப் பழம் சாப்பிடலாம்.
  • இன்றைக்கு வாழ்வியல் மாற்றங்களால் நிறைய பேரை புற்றுநோய் பாதிக்கிறது. ஆனால், திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், இதை கட்டாயம் நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

Tags

Next Story