இந்த 8 உணவுகளை மட்டும் சாப்டறாதீங்க..! குடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு..| Foods to avoid for a healthy gut in Tamil

இந்த 8 உணவுகளை மட்டும் சாப்டறாதீங்க..! குடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு..| Foods to avoid for a healthy gut in Tamil
X
குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில உணவுகளை பற்றி இங்க பார்க்கலாம்.

நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலனும் ஆரோக்கியமாக இருக்கணும்னா குடல் ஆரோக்கியத்தை முறையா பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். நம்ம குடலில் இருக்க நுண்ணுயிர்கள் நமது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநலனில் முக்கிய பங்கு வகிக்குது. ஆனா நாம சாப்புட்ற சில உணவுகள் நம்ம வயிரோட செயல்பாட்டை மிக மோசமா பாதிக்குது. எந்தெந்த உணவுகளை சாப்டா குடல் ஆரோக்கியம் பாதிக்கும்னு பாக்கலாம்.

ஆரோக்கியமான குடலுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள் | Foods to avoid for a healthy gut in Tamil

1 .சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

2.தொழிற்சாலை-பயிரிடப்பட்ட இறைச்சி

3.சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

4.செயற்கை இனிப்புகள்

5.அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு

6.வறுத்த உணவுகள்.

7.ஆல்கஹால்

8.ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப்

குடல் ஆரோக்கியத்திற்கு மோசமான உணவுகள் | Worst foods for gut health

பொறித்த உணவுகள் (Fried foods) :

பொறித்த உணவுகள் மிகவும் சுவையாக இருந்தாலும்,இதில் நம் குடல் பாக்டீரியாக்களை பாதிக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன. அடிக்கடி வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை சாப்பிடுவதால் குடலில் வீக்கம் உண்டாகும்.

செயற்கை இனிப்பூட்டிகள் (Artificial sweeteners) :

செயற்கை இனிப்பூட்டிகள் என்பது சர்க்கரைக்கு ஈடாக இனிப்பு சுவை கொண்டிருக்கும் அதே சமயம், மிகக் குறைவான கலோரி அல்லது முற்றிலும் கலோரி இல்லாத தன்மை கொண்டிருப்பது தான் செயற்கை இனிப்பூட்டிகள் ஆகும். அடிக்கடி செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தினால் செரிமானப் பிரச்சனைகள் வரக்கூடும். இதனால், குடல் பாதிப்படைய வாய்ப்பு அதிகம்.


கஃபைன் (Caffeine) :

கஃபனை அளவாக எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதுதன் என்றாலும் அதிகப்படியாக சாப்பிட்டால் குடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக கஃபைன் உடலில் சேரும் போது நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்றவை வருகிறது.மேலும்,குடலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

மதுபானம் (Liquor) :

நாம் பருகும் மதுபானம் குடலில் உள்ள நுண்ணுயிரின் சமநிலையை பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.இதனை அதிகம் எடுத்து கொள்வதன் மூலம் குடலின் ஆரோக்கியம் பாதிக்கிறது .ஆகையால் குறைவான அளவு மதுபானம் எடுத்துக்கொண்டு ஆரோக்கிய பானங்களான மூலிகை டீ, கொம்புச்சா ஆகியவற்றை நிறைய பருகுங்கள்.

சிவப்பு இறைச்சி (Red meat) :

சிவப்பு இறைச்சியில் அதிகளவு புரதமும் ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஆட்டுக்குட்டி, மான் இறைச்சி மற்றும் பன்றி ஆகியவை சிவப்பு இறைச்சியின் எடுத்துக்காட்டுகள்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Processed foods) :

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை. இவைகள்,சாப்பிடுவதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தாலும், அதில் பல சேர்க்கைப் பொருட்கள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் ஆகியவை உள்ளன. இவை நம் குடலில் உள்ள நுண்ணுயிரின் சமநிலையை பாதித்து செரிமானக் கோளாறுகளையும் வீக்கத்தையும் உண்டாக்குகிறது.


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (Refined sugar) :

சோளம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு போன்ற உணவுகளில் இயற்கையாக காணப்படும் சர்க்கரையை பிரித்தெடுத்து பதப்படுத்துவதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பின்னர் சுவையை அதிகரிப்பது உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் பல வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர்பானங்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. இவை நம் குடல் ஆரோக்கியத்தில் (foods that destroy gut health) மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகையால் மிட்டாய்கள், இனிப்புகள், சோடா பானங்கள், பேக்கரி பொருட்கள் அகியவற்றை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் (High fructose corn syrup) :

உயர் பிரக்டோஸ் கார்ன் சிரப் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு திரவ இனிப்பு ஆகும். சோள மாவு தனித்தனி மூலக்கூறுகளாக உடைக்கப்படும் போது, ​​அது கார்ன் சிரப்பாக மாறும், இது 100% குளுக்கோஸ் , ஒரு எளிய சர்க்கரை. இந்த குளுக்கோஸில் சிலவற்றை பிரக்டோஸாக மாற்ற என்சைம்கள் சேர்க்கப்படுகின்றன.

அதிக ஃப்ரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப்பை பருகுவதால் குடலில் உள்ள பாக்டீரியா சமநிலை பாதிக்கப்பட்டு அழற்சியை உண்டாக்குகிறது. எப்போதும் உணவு பாக்கெட்டுகளின் லேபிளை வாசித்து பொருட்களை வாங்கவும்.ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் இல்லாத பொருட்களை வாங்குங்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil