செரிமானம் ஆகாம கஷ்டப்படுறீங்களா ?... அப்ப வீட்ல இருக்க இந்த சில பொருட்களை மட்டும் ட்ரை பண்ணுங்க !...

செரிமானத்தை சரி செய்ய உதவும் சில பொருட்களின் நன்மைகளை பற்றி இதில் தெரிந்துகொள்வோம் .

புதினா

புதினா என்பது மருத்துவ குணங்களும் , மிகுந்த சுவையும் கொண்ட ஒரு தாவரமாகும் . இது சமையலில் மட்டுமின்றி மருத்துவத்தில் மற்றும் அழகுப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது . நம்மூரில் அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க புதினா அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. புதினா, பசியின்மையை அதிகரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. இதனை நாம் தேநீராக அருந்தும்போது தலை வலி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது . சூயிங் கம், புதினா கேப்ஸ்யூல் என அமெரிக்கர்கள் புதினாவை செரிமானக் கோளாறை சரிசெய்யும் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

புதினாவின் வாசனை மனதிற்கு அழுத்தத்தை குறைத்து, அமைதியையும் உற்சாகத்தையும் தருகிறது. இதனால் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கமின்மை,ஆழ்ந்த கவலையையும் சரிசெய்ய உதவும்.மலக்குடலில் அமைந்திருப்பது ‘TRPM8’ என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும்போது ஏற்படும். வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். இதனால் வாயுப்பிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​புதினா, ஆஸ்துமா, காச நோய்களுக்கும் பலனளிக்கிறது. இதன் சுவாசக் கோளாறுகளை சரிசெய்யும் ஆற்றல், மூச்சு விட சிரமம் உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை தருகிறது.

புதினாவின் பயன்கள் :

1.சுவாச பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது .

2.தேமல் மற்றும் செறிவுகளை குணமாக்கும்.

3.வாயு பிரச்சனைகளுக்குத் தீர்வு தர கூடியது .

4.சிறந்த அழகு சார்ந்த போலாகவும் பயன்படுகிறது .

இஞ்சி

இஞ்சி என்பது நமது உடலுக்கு நமைகள் தரக்கூடிய மூலிகை பொருட்களுள் ஒன்று . இது நமது செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது . நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில், செரிமான அமிலம், கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல். இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும்.இஞ்சி, ஜிஞ்சரால் என்னும் எண்ணெய் கொண்டது. இது, வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது.

இஞ்சி கலந்த வெந்நீரைத் தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும். இஞ்சி, தோலின் சுருக்கங்களை குறைத்து, முகத்தின் பொலிவையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

இஞ்சியின் நன்மைகள் :

1.செரிமானத்தை மேம்படுத்தும்.

2.சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

3.சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது .

4.உடல் எடையை குறைக்கும்.

5.மூச்சுக்குழல் சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது .

லவங்கம்

லவங்கம் என்பது மிகவும் ஆற்றல்மிக்க மருத்துவ மூலிகையாகும். இது சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளால் பயன்படுத்திவந்த லவங்கம், அதன் மருத்துவப் பலன்களால் புகழ்பெறத் தொடங்கியது. குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.லவங்கம் என்பது மிகவும் ஆற்றல்மிக்க மருத்துவ மூலிகையாகும். இந்திய சமையலிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் லவங்கம் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

லவங்கம், பல் வலியை நிவாரிக்கவும், வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கவும் உதவுகிறது. இதன் மூலம் வாய்ப்புண்,லவங்கத்தில் உள்ள சத்துக்கள் செரிமானத் திறனை மேம்படுத்துகின்றன. இது வயிற்று வலி, மந்தம், வாயு போன்ற செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவும். பல்லில் தோன்றும் தொற்று மற்றும் மூச்சு துர்நாற்றம் ஆகியவை குறையும்.

லவங்கத்தின் நன்மைகள் :

1.நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2.உடல் சூட்டை கட்டுப்படுத்தும்.

3.நுரையீரல் மற்றும் சுவாச நலத்திற்கு உதவும்.

4.செரிமானத்தை மேம்படுத்தும்.

5.மனம் அழுத்தத்தை குறைக்கும்.

ஓமம்

ஓமம் என்பது இந்திய பாரம்பரியத்தில் பண்டிகைகள், சமையல், மற்றும் மருத்துவ பயன்பாடுகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உடைய ஒரு மூலிகையாகும் . ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும். இது கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

இது கிழக்கு இந்தியாவில் பயிரிடப்பட்ட ஓமச் செடி, அதன் அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையால், இந்தூர், ஆந்திரப் பிரதேசம் ஆகியப் பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் சுவையும் மருத்துவ குணங்களும் அதனை ஒரு அற்புத மூலிகையாக மாற்றுகின்றன.

ஓமத்தின் நன்மைகள் :

1.செரிமானத்துக்கு உதவுகிறது .

2.இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது .

3.நீரிழிவு நோய்க்கு உதவுகிறது.

4.தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும்.

5.வாயுவை வெளியேற்ற உதவுகிறது .

சீரகம்

சீரகம் சமையலில் மட்டுமின்றி, மருத்துவ குணங்களுக்காகஇரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்சிடன்டுகள் உள்ள மூலிகைச் செடி சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிகளில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். சீரகத்தில் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

சீரகத்தை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் குணமாகும்.இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது; நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது.நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் ரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

சீரகத்தின் நன்மைகள் :

1.வயிற்றுப்போக்கு மற்றும் எரிச்சல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது .

2.மூட்டு வலிக்கு உதவுகிறது .

3.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

4.செரிமானத்தை மேம்படுத்தும்.

5.இரத்த சோகைக்கு நல்ல நிவாரணியாக செயல்படுகிறது .

வெந்தயம்

வெந்தயம் சமையல் மற்றும் மருந்துத் தாவரங்களின் முக்கிய மூலிகையாகும். வெந்தயம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன், அன்றாட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் பயன்படுகிறது. இதன் மருத்துவக் குணங்கள் மற்றும் சத்துக்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றன.இதனை நாம் ஹேர் மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் . இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் .

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகம் விளையக்கூடிய மூலிகைச் செடி வெந்தயம். வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஆன்டிஆக்சிடன்டுகளும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதன் மூலம் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது .

வெந்தயத்தின் நன்மைகள் :

1.கொழுப்பு சத்து மற்றும் கொழுப்பை குறைக்கும்.

2.சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

3.செரிமானத்தை மேம்படுத்தும்.

4.மூட்டு வலியை நிவர்த்தி செய்கிறது.

5.ஆரோக்கியமிக்க முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெந்நீர்

சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதப்படுகிறது. இதனைத் தவிர்த்துவிட்டு, சாப்பிட்டவுடன், சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவுப் பொருட்கள் எளிதில் உடையும்.

கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும்.

வெந்நீரின் நன்மைகள் :

1.செரிமானத்தை மேம்படுத்தும்.

2.வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்கும்.

3.இரத்தச் சுழற்சியை மேம்படுத்தும்.

4.எடையை குறைக்க உதவுகிறது .

5.மலச்சிக்கலை குணமாக்கும்.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!