மாணவர்களே..தேர்வு சமயம் உங்க நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!

மாணவர்களே..தேர்வு சமயம் உங்க  நினைவாற்றல் அதிகரிக்க வேண்டுமா..? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!
X
தேர்வு நேரத்தில் மாணவர்கள் நினைவாற்றல் பெற உண்ணும் உணவு பற்றி இத்தொகுப்பில் காணலாம்.


தேர்வு காலத்தில் மூளைக்கு சக்தி தரும் உணவுகள்
அரையாண்டு தேர்வு வேற வருது மாணவ, மாணவிகள் பயமா இருக்கு , எப்படி படிப்ப தெரில..? படுச்சாலு மண்டைல ஏற மாட்டிகிது சொல்லுறாங்க. காரணம் மொபைல் தான் அதை பாத்துட்டே இருப்பாங்க அது மூளை செல்கள் பாதிச்சு நினைவாற்றல் கம்மி ஆக்குது. அதனால் தேர்வில் நன்றாக படுச்சு நல்ல மார்க் எடுக்கணும் , படுச்சது நல்லா மனப்பாடம் ஆகணும் அப்படினா இந்த உணவு சாப்பிடுங்க.

1. நினைவாற்றலை மேம்படுத்தும் பழங்கள்

வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு தேவையான சக்தியை வழங்குகின்றன. இவற்றில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

2. ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீன், பாதாம், வால்நட் போன்றவற்றில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. தினமும் ஒரு பிடி பாதாம் சாப்பிடுவது நல்லது.

3. புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, பருப்பு வகைகள், சோயா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை நீண்ட நேரம் கவனம் செலுத்த உதவும்.

4. முழு தானியங்கள்

ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு போன்ற முழு தானியங்கள் நிலையான ஆற்றலை வழங்குகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

5. பச்சை காய்கறிகள்

கீரை வகைகள், பிராக்கோலி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் மூளைக்கு தேவையான விட்டமின்களை வழங்குகின்றன. இவை ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.

6. தேர்வு நாட்களில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பழக்கங்கள்

• காலை உணவை தவிர்க்காதீர்கள்
• போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள்
• சிறு சிறு இடைவேளைகளில் உணவு உட்கொள்ளுங்கள்
• அதிக காபி, டீ தவிர்க்கவும்

7. தவிர்க்க வேண்டிய உணவுகள்

• அதிக சர்க்கரை உள்ள உணவுகள்
• பதப்படுத்தப்பட்ட உணவுகள்
• அதிக எண்ணெய் உள்ள உணவுகள்
• கார்பனேட்டட் பானங்கள்

8. படிப்பதற்கு சிறந்த நேரம்

அதிகாலை 4-7 மணி வரை மூளை செயல்பாடு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பது நல்லது. முதல் நாள் இரவு நன்றாக தூங்கி இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

9. மனநல ஆரோக்கியம்

தேர்வு பயத்தை போக்க தியானம், யோகா செய்யுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மூளைக்கு நல்லது.

10. மொபைல் பயன்பாடு

படிக்கும் நேரத்தில் மொபைல் போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கவும். மொபைல் போன் ஒளி மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
முக்கிய குறிப்பு: இந்த உணவு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நினைவாற்றல் மேம்படும், தேர்வில் நன்றாக எழுத முடியும். ஆனால் முறையான படிப்பும் அவசியம் என்பதை மறக்க வேண்டாம்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது