எருக்கம் செடி...எப்பேர்பட்ட குதிகால் வலியையும் போக்கும்...! அடடே முக்கியமான விசயத்த மறந்துட்டேனே...! | Erukkanchedi benefits in tamil
நம் மண்ணில் அனைத்து இடங்களிலும் தன்னிச்சையாக முளைத்து அடர்ந்து காணப்படும் தாவரம் எருக்கு(Erukkanchedi). மலர்களில் நீல நிற வரி காணப்படும் இனம் சாதாரண ''எருக்கு''(Erukkanchedi) என்றும் மலர்கள் முழுக்க வெண்மையாக இருந்தால் ''வெள்ளெருக்கு'' என்றும் அழைக்கப்படும்.
எருக்கு | Erukkanchedi benefits in Tamil
எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும்(Erukkanchedi benefits in tamil) மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் ஏறினால் எருக்கு இலையை(Erukkanchedi) உடைத்து அதன் பாலை முள் ஏறிய இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன் அந்த இடம் பழுத்து முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’(Erukkanchedi) என்று சொல்லுவார்கள்.
எருக்கின் பயன்கள் | Medicinal Benefits
1.பாம்பு - தேள் கடி| Snake Bite and Scorpion Sting
இதன் இலையை அரைத்து 5 கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக் கடிக்குக் கொடுக்கலாம்.
2.குதிங்கால் வலி | Heelpain
பழுத்த இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.
3.மலக்கட்டு | Malakattu
20 மி.லி. சிற்றாமணக்ககு எண்ணெயில் 3 - 5 துளி எருக்கன்(Erukkanchedi) பால் விட்டுக் கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.
4.வயிற்றுப் பூச்சி | Intestinal worms
சிறு குழந்தைகளுக்கு வயிற்றில் கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம் தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.
5.காது நோய் | Ear diseases
எருக்கன் இலைச்(Erukkanchedi) சாறு 50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு, பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு 5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்காதில் விட காதில் சீழ் வடிதல், குருதி கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி ஆகியன குணமாகும்.
6.குட்டநோய் :
இதன் இலையும்(Erukkanchedi) , வேர் பட்டையும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3 கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும், யானைக்கால் வியாதியும் குணமாகும். உப்பில்லாமல பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம் எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான் சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ குணமடையும்.
7.காக்கை வலிப்பு | Epileptic seizures
எருக்கன் இலையில் (Erukkanchedi) வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன் இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம், மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள் 30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச காக்கை வலிப்பு வராது.
8.பல்வலி | Teethpain
எருக்கன்(Erukkanchedi) பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் குணமடையும்.
9.ஆஸ்துமா | Asthma
வெள்ளெருக்கன்(Erukkanchedi) பூ 100 கிராம், மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ, கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48- முதல் 96 நாளில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு, இருமல், காசம், ஜன்னி குணமடையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu