நம்ம வீட்ல இருக்க இந்த ஒரு பொருள் போதும் ....! காய்ச்சல் , இருமல்னு எல்லாத்தையும் ஓட ஓட விரட்டும்… !

உடலுக்கு ஆரோக்கியத்தையும் , சுறுசுறுப்பையும் தரக்கூடிய இந்த சுக்குவை அன்றாட உணவில் சேர்ப்பதால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

சுக்கு :

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. இஞ்சியின் ஈரத்தன்மையை முழுவதும் உறிஞ்சிகொள்ளும் சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம். சுக்கை நாம் சளி , காய்ச்சல் இருக்கும்போது கஷாயமாக குடிக்கலாம். அதே போல் தலை வலி இருந்தாலும் சுக்கை தேநீரில் சேர்த்து சுக்கு டீயாக குடிக்கலாம் . இது தலை வலி , காய்ச்சல் போன்றவற்றை போக்குவதோடு , உடலுக்கு ஆரோக்கியத்தையும் , சுறுசுறுப்பையும் தருகிறது .இந்த சுக்குவை அன்றாட உணவில் சேர்ப்பதால் என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

இஞ்சி இல்லாத சமையலறை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான உணவுகளில் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சியை உலரவைத்தாலும் அற்புதமான நன்மைகள் கிடைக்கும் சுக்காக மாறுகிறது. ஆயுர்வேதத்தின் முக்கிய மூலிகையான திரிகடுகம் ஆனது சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று பொருள்களின் கலவை என்பதில் இருந்தே சுக்குவின் மருத்துவ குணங்களை அறிந்துகொள்ள முடியும். அதனால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்று சொல்வது.சுக்கு ஒரு ஆன்டி-ஆக்சிடன்ட், ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் நோயெதிர்ப்பு தன்மை கொண்டது. இந்த சுக்குவின் மருத்துவ நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பருவமழையால் வரக்கூடிய நோய்களை தடுக்கும் சுக்கு

1.மழைக்காலங்களில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல்

2.நோயெதிர்ப்பு சக்தி பலவீனத்தால் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று

3.காய்ச்சல் அறிகுறிகள்

4.செரிமான பிரச்சனைகள் (வயிறு உப்பசம், வயிற்று கோளாறு, வயிறு வலி, வீக்கம், அஜீரணம்)

5.சுவாச பிரச்சனைகள் ( ஆஸ்துமா, வீசிங், மூச்சுக்குழாய் அழற்சி)

6.சருமத்தில் ஏற்படும் தொற்று

மழைக்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் சுக்கு

மழைக்காலத்தில் நமது உடல் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது, குறிப்பாக செரிமானக் குறைபாடுகள், உடல் எடை அதிகரிப்பு, வீக்கம் போன்றவை அதிகமாக காணப்படும். அப்போது இயற்கையான மருத்துவ முறையில், சுக்கு (உலர்ந்த இஞ்சி) நம் செரிமானத்தை மேம்படுத்துவதில் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

நீண்ட காலம் அஜீரண கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் வயிற்று வலி மற்றும் அசெளகரியம் எதிர்கொள்வார்கள். மேலும் மோசமான உணவு பழக்கம் எல்லாம் சேர்ந்து மழைக்காலங்களில் மோசமான செரிமான மண்டலத்தை உண்டு செய்யும். இரைப்பையில் உணவு காலியாவதை மந்தமாக்கும். சுக்கு சேர்ப்பது வயிறு காலியாவதை துரிதப்படுத்தும். மேலும் குடல் வாயு, அஜீரணம் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு இது ஏற்றது.

மழைக்காலத்தில் கொலஸ்ட்ராலை குறைக்க என்ன சாப்பிடலாம்?

மழைக்காலத்தில் நமது உடல் இயல்பாக சற்றே மந்தமாக செயல்படலாம், குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த இயற்கையான முறையில் சில உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம்.

1. கீரை மற்றும் இலைகள்:

கீரைகள் மற்றும் வேர் காய்கறிகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் பண்புகள் கொண்டவை. இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், கொழுப்பைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. மழைக்காலத்தில் இது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2.வாழைப்பழம்:

மழைக்காலத்தில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த, வாழைப்பழம் முக்கியமாக செயல்படுகிறது. இதன் உப்புச்சத்து (potassium) இரத்தத்தில் கொலஸ்ட்ராலை சீராக்குவதில் உதவுகிறது.

3. பயறு வகைகள்:

பயறு வகைகள் (மூங்கில் பருப்பு, கிண்டிப்பருப்பு) அதிக நார்ச்சத்து கொண்டவை. இவை நல்ல கொழுப்புகளை அதிகரிக்கவும், மோசமான கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகின்றன. மழைக்காலத்தில் இவை சூப்பாக அல்லது குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

4. சீரகம் மற்றும் சுக்கு:

மழைக்காலத்தில் சீரகம் மற்றும் சுக்கு குடிநீர் அல்லது கஷாயமாக அருந்துவது உடலின் கொழுப்பு அடைப்புகளை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தும்.

அதிக அளவு கெட்ட கொழுப்பு இருந்தால் அது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அறிவோம் எனினும் மழையில் சூடான பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய் பொருள்கள் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கலாம். சுக்கு சேர்ப்பது உடலில் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்கிறது.

மழைக்காலத்தில் நீரிழிவு நோயை நிர்வகிக்க செய்யும் சுக்கு

மழைக்காலம் பொதுவாக உடலின் உட்பகுதிகளை அதிக ஈரப்பதமடையச் செய்யும், இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு மாறக்கூடும். இதனை கட்டுப்படுத்த இயற்கையான ஒரு மருந்தாக சுக்கு மிகச் சிறந்தது.

சுக்கு சக்திவாய்ந்த உயிரியக்க கலவைகள். இது இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்கிறது. இவற்றில் இருக்கும் ஜிங்க் ஆனது இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு திறனை கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் இதை உணவில் சேர்த்து எடுப்பது பாதிப்பை உண்டு செய்யாது. ஆனால் சர்க்கரை அளவு சரியாக இருந்தால் கவனத்துடன் எடுக்க வேண்டும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் சுக்கு

சுக்கின் முக்கியமான பண்புகளில் ஒன்று, இது அழற்சியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அழற்சி, உடலில் ஏற்பட்டுள்ள தீவிரமான அல்லது நாள்பட்ட பாதிப்புகளின் அறிகுறியாகும்.மேலும் இது பல நோய்களுக்கு அடிப்படையான காரணமாகும். சுக்கின் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

சுக்கு வீக்கத்தை குறைக்கவும் நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவக்கூடியது. இதில் இருக்கும் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் ஆனது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அழற்சியினால் வெளிப்படும் ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் என்னும் முடக்குவாதம், ஆர்த்ரைட்டீஸ் என்னும் கீல்வாத உள்ளிட்ட மூட்டுவலியை குறைக்கிறது. இது மூட்டுகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும். வீங்கிய மூட்டுகளை சரி செய்யும்.

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சுக்கு

சுக்கு, சுவாசகுழாய்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் தன்மையினால் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகுந்த உதவியாக இருக்கிறது. சுக்கு உடலின் அழற்சியைக் கட்டுப்படுத்தி, மூச்சுக்குழாய்களில் ஏற்படும் தடை, சளி, மற்றும் சுவாசப்பாதை அழற்சிகளை சரி செய்யும் ஆற்றல் கொண்டது. இது உடலில் குளிர்ச்சி ஏற்படுதல், சளி, மற்றும் இருமலை குறைக்கும் ஆற்றல் கொண்டது. சுக்கு நீரை அல்லது சுக்கு கஷாயத்தை சுவாச பிரச்சனைகள் உள்ளபோது அருந்தினால், சளி வெளியேற்றம் சுலபமாகி, மூச்சுவிடுதல் சீராகும்.

சுக்கு, ஆஸ்துமா, மற்றும் சுவாசப்பாதையில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நிவாரணமாக விளங்குகிறது. சுக்கில் உள்ள ஆன்டி-இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மைகள் சுவாசப்பாதையில் உள்ள தடை மற்றும் வீக்கம் குறைத்து, சுவாசத்தை சீராக்க உதவுகிறது.

மழைக்கால நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுக்கு

மழைக்காலம் பொதுவாக நோய்களின் பரவல் அதிகரிக்கும் காலமாகும். குளிர், சளி, காய்ச்சல், வைரல் தொற்றுகள் போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்திருப்பது பல்வேறு நோய்களைத் தடுக்க முடியாமல் செய்கிறது. அப்படி சில சமயங்களில், இயற்கை மருந்துகளின் உதவியால் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மிக முக்கியம். சுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு அருமையான மூலிகை ஆகும். இது பல்வேறு நோய்களைத் தடுக்க உதவுகிறது.

வீட்டில் சுக்கு தயாரிக்கும் முறை

1.இஞ்சியை கழுவி தோலுரித்துவிட்டு மெல்லிய துண்டுகளாக நறுக்கி நன்றாக வெயிலில் உலரவிடவும்.

2.இதன் ஈரப்பதம் குறைய வேண்டும்.

3.அறை வெப்பநிலையில் மற்றொரு 4 நாட்கள் வரை மீண்டும் உலர விடவும்.

4.உடைக்கும் அளவு உலர வேண்டும்.

5.மிக்ஸியில் மைய அரைத்து காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும்.

6.குழந்தைகளுக்கு தயாரிக்கும் போது சுக்குபொடியை அரைத்து சலித்து பயன்படுத்தவும்.

7.ஆறுமாதங்களுக்கு ஒருமுறை தயாரித்து பயன்படுத்தலாம்.

சுக்குவை எப்படி எல்லாம் எடுத்துகொள்ளலாம்?

சுக்கு தேநீர்

சுக்கு, துளசி இலைகள், மற்றும் தேன் சேர்த்து தயாரிக்கப்படும் சுக்கு தேநீர் மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

சுக்கு கஷாயம்

சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்துவதால் சளி, காய்ச்சல், மற்றும் சுவாச பிரச்சனைகள் குறையும்.

சுக்கு பொடி

சுக்கு பொடியை வெந்நீரில் கலந்து அல்லது உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

செரிமானம் மேம்பட

அஜீரணக்கோளாறு இருப்பவர்கள் உணவுக்கு முன்பு 1-2 கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து அதில் சுக்குப்பொடி கலந்து குடிக்கலாம்.

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை வேளையில் 2 கிராம் சுக்குப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். எனினும் அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை கவனிக்க வேண்டும்.

அழற்சி வீக்கம்

அழற்சியினால் உண்டாகும் மூட்டு வீக்கத்துக்கு சிட்டிகை உப்புடன் கால் டீஸ்பூன் சுக்குப்பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிடுவது பலன் கொடுக்கும்.

குழந்தைகளுக்கு சுக்கு கொடுக்கலாமா?

  • சளி மற்றும் இருமல் இருக்கும் போது காய்ச்சிய பாலில் பனங்கற்கண்டு மற்றும் சுக்குப்பொடி கால் டீஸ்பூன் கலந்து கொடுக்கவும்.
  • சுக்குபொடியை தேனில் கலந்து குழந்தை நாக்கில் தடவி விடலாம்.

எச்சரிக்கை:

சுக்கு வலிமையானது என்பதால், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரத்தம் உறைதல் பிரச்சனையுள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் சுக்கைப் பயன்படுத்த வேண்டும்.

  • நாள் ஒன்றுக்கு 1-3 கிராம் அளவுக்கு மேல் எடுக்க கூடாது.
  • நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவு குறைய மருத்துவரின் அனுமதியுடன் எடுத்துகொள்ள வேண்டும்.
  • உடல் உஷ்ணம் தொடர்பான நோய்களை கொண்டிருப்பவர்கள் உணவில் சுக்கு சேர்க்கலாம். ஆனால் மருந்தாக எடுப்பதாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசித்து சேர்க்க வேண்டும்.
  • சுக்கு இல்லாத நிலையில் சுக்குவுக்கு பதிலாக இஞ்சியை சேர்க்கலாம்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !