பாதத்தில் வெடிப்பா....என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா ? அதற்கான உடனடி தீர்வு இதோ...!
பாதவெடிப்பு :
அதிக உடல் எடையும், தோல் வறட்சியும் தான் பாத வெடிப்பிற்கான முக்கிய காரணங்கள். உடலில் உள்ள மற்ற பகுதியில் உள்ள தோல்களை விடக் காலில் உள்ள தோல் மிக தடினமாக இருக்கும். காலின் கீழ் பகுதியில் கொழுப்பு அடுக்கு இருப்பதால் உடல் எடை அதிகமானால் அந்த அடுக்கு இடம்மாறி வெடிப்பு ஏற்படுகிறது என ஆய்வு கூறுகிறது.இதை தான் பாதவெடிப்பு என்கிறோம்.இன்று பெரும்பாலும் முகத்திற்கு காட்டும் அக்கறை பாதத்திற்கு காட்ட படவில்லை.அதனால் பாதவெடிப்பு அதிகரிக்கிறது.பாதத்தில் வழி ஏற்பட்ட பின்பு தான் அதை நாம் கவனிக்கிறோம்.இனிமேல் அதிலும் கவனம் செலுத்த வேண்டும்.அதற்கான வழிகள் இங்கு காண்போம்.
பாதவெடிப்பு வருவதற்கான காரணங்கள் :
1. நாம் அணியும் காலணிகளால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக இவை வரலாம்.
2. நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு நரம்புகள் பாதிப்பால், வெடிப்புகள் உண்டாகி தொல்லை கொடுக்கும்.
3.நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, சொரியாசிஸ், தைராய்டு சுரப்பி பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை இருந்தாலும் பாத வெடிப்பு எளிதில் வரும்.
பாதவெடிப்பிற்க்கானஉடனடி தீர்வு :
1. உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டால் பாதங்களில் வறட்சி காரணமாக வெடிப்பு ஏற்படுகிறது. இதேபோல் உடல் எடை அதிகரிப்பால் அழுத்தம் ஏற்பட்டு பாத வெடிப்பு உண்டாகிறது. இதை கட்டுப்படுத்த எடையை குறைப்பது அவசியமாகும்.
2.மருதாணி இலைகளை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி உலர்ந்த பிறகு கழுவினால் வெடிப்புகள் மறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முற்றிலும் குணமாகும். மருதாணி இலைகள் அதிகம் குளிர்ச்சி தன்மை உடையது என்பதால் அதிகம் நேரம் கால்களில் வைத்திருக்க வேண்டியது இல்லை.இதனால் பாதம் பளபளவென ஆகும்.
3. வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.
4. தினமும் தூங்குவதற்கு முன்பு கால்களை நன்றாக கழுவி உலர்ந்த பிறகு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்பு வராது.
5.ஒரு பாத்திரத்தில் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதில் பாதங்களை சிறிது நேரம் வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தம் செய்தால் வெடிப்புகள் மறைந்து பாதம் பளபளப்பாக மாறும்.
6.பாதங்கள் வறண்டு காணப்பட்டால் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பளபளப்பாக மாற்ற முடியும். பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் வெடிப்புகள் மிருதுவாகி விரைவில் மறையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu