பசும் பாலில் இவ்வளவு நன்மைகள் இருக்கா ? இது தெரிஞ்சா இனி கடைல பாக்கெட் பால் வாங்க மாட்டிங்க !..
பால்( Milk ) என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் ( Milk ) குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.
நாட்டு பசுக்களின் பாலில் ( Milk ) உடல் வலிமை தரும் வகையிலான புரதம் உள்ளது. பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது.
நாட்டு பசும்பாலில்( cow's milk )உள்ள பீட்டா கெசின் என்னும் புரதம் உடலை வலிமை அடைய செய்கிறது. கலப்பின பசும்பாலில்( cow's milk ) உள்ள பீட்டா கெச் என்னும் புரதம் பீட்டா கேசோ மார்பின் என்று சொல்லப்படுகின்ற நமது உடலுக்கு ஒவ்வாத புரதப்பொருட்களை உணவுப் பாதையில் உண்டாக்குகின்றது.
சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் , மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை ( milk )கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.
பசும்பாலில்( cow's milk ) 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு. பசும்பாலில்( cow's milk ) புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. உடல் பருமனாக இருப்பவர்கள், ஜீரண கோளாறு இருப்பவர்கள், பசும்பாலை குடிக்கலாம்.
பசும் பாலின் மருத்துவ குணங்கள்..| Medicinal Benefits of Fresh Milk
பசுவின் பால்( cow's milk ) குழந்தைகளுக்கும், வயதானோர்களுக்கும், நாட்பட்ட சுரம், காயங்கள், வயிற்றுப் புண், வாதம், வயிற்று வலி, பால்வினை நோய்(மேக நோய்), வலுவின்மை, உடல் இளைத்தவர்கள், மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்கள், மூளை சம்பந்தமான வியாதிஸ்தர்களுக்கு பசுவின் பால் நன்மை தரும்.
தாய்ப்பால் இல்லாத மற்றும் எலும்பும், தோலுமாக இருக்கும் நோஞ்சான் குழந்தைகளுக்கு பசும்பால்( cow's milk ) ஒரு அற்புதமான உணவாகும். சுத்தமான பசும் பாலுடன் சம அளவு தண்ணீர் கலந்து காய்ச்சி ஆடையை நீக்கிக் கொடுத்து வர நல்ல சுகத்தைக் கொடுத்து தேகத்தைப் போஷிக்கும்.
மேலும், விரண ரோகிகளுக்கும், துர்ப்பல முடையவர்களுக்கும், உடல் இளைத்தவர்களுக்கும், மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும், நெடுநாள் சுரத்தில் கஷ்டப்படுகிறவர்களுக்கும், மூளை சம்பந்தமான வியாதிஸ்தர்களுக்கும், வாத ரோகிகளுக்கும், குடல் சம்மந்தமான வியாதியஸ்தர்களுக்கும், அஜீர்ணபேதி உடையவர்களுக்கும், நீர்த்தாரை விரணமுடையவர்களுக்கும் பசும்பால்( cow's milk ) அருமருந்தாகும். இதனால் சக்தி மிகுந்து அவர்கள் பழைய சுகத்தை அடைவார்கள். பால் சோறு சாப்பிட்டால் பலம் பெறும்.
சன்னிபாத சுரத்தில் Enteric (typhoid) Fever காய்ச்சிய பாலுடன் பார்லி அரிசியை மலர வேகவைத்து வடித்தெடுத்த கஞ்சியை 2 பங்கு கூட்டிக் கலக்கி கொடுப்பது சிறந்த பத்திய உணவாகும். சில சந்தர்ப்பங்களில் பசுவின் பாலைக்( cow's milk ) காய்ச்சி எலுமிச்சம்பழச் சாறுவிட்டு முறித்து, வடிகட்டித் தெளிவு நீரையும் கொடுப்பதுண்டு.
தேகமிளைத்தவர்களுக்கும், நரம்பு தளர்ந்தவர்களுக்கும் பசுவின் பாலை( cow's milk ) ஆடை கட்டாமல் கிளறிக் கொடுத்து பதமுற காய்ச்சிச் சிறிது சிறிது சீனா கற்கண்டு தூளிட்டு, இரவு படுக்கைக்கு போகும்போது தினந்தோறும் உட்கொண்டுவர நல்ல பலம் உண்டாகும்.
பசும் பாலில்( cow's milk ) சிறிது மஞ்சள் தூளிட்டுத் தினந்தோறும் காலையில் அருந்தி வந்தால் “வறட்டு இருமல்” குணமாகும்.
தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of drinking Milk
- மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால்(( milk ) கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.
- இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
- சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.
- பாலில்( milk ) வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
- தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
- பாலில் ( milk )பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
- தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால்( milk ) பருக வேண்டும். தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்க பால்( milk ) உதவுகிறது. இரவில் பால்( milk ) உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிக்க முடிகிறது.
- நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், காலையில் சூடான பாலை( milk ) உட்கொள்ள வேண்டும். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இவை மன அழுத்தத்தை நீக்க உதவுகின்றன. தினசரி காலையில் பால் உட்கொள்வதன் மூலம் பலவீனத்தைத் தவிர்க்க இயலும். மேலும், உடலை உற்சாகப்படுத்துகிறது.
- பெண்கள் தங்கள், முகத்தை பொழிவுடன் வைத்திருக்க தினசரி இரவில் பால்( milk ) உட்கொள்ள வேண்டும்.
பாலில் காணப்படும் ஊட்டச்சத்து | Nutrients Found in Milk
பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், 0.94 அளவு புரதம், 1.08 அளவு கொழுப்பு மற்றும் 1.36 அளவில் கார்போஸ் ஆகியவை உள்ளன.
பாலின் பக்க விளைவுகள் | Side effects of Milk
பாலில்( milk ) குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவுமில்லை, எனினும் அதிக அளவில் பால் குடிப்பதால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. தினசரி சரியான அளவில் பால் பருக வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu